Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துவக்க வீரராக ஆட இருக்குறது சிறப்பான முடிவு..அந்த பொசிஷன் பத்தி அவருக்கு நல்லா தெரியும்.ஹெசன் உறுதி

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்னும் 8 நாட்களில் துவங்கவுள்ளது.

இந்த தொடரில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் துவக்க வீரருக்கான நிலை குறித்து அவருக்கு நன்றாக தெரியும் என்றும் இது சிறப்பான முடிவு என்றும் அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி மோதல்

மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி மோதல்

ஐபிஎல்லின் இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னையில் ஆர்சிபி அணி மோதவுள்ளது. இந்த தொடரில் தான் துவக்க வீரராக களமிறங்க உள்ளதாக அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இடையில் அறிவித்துள்ளார்.

விராட் முடிவு சிறப்பானது

விராட் முடிவு சிறப்பானது

இந்நிலையில் விராட் கோலிக்கு துவக்க ஆர்டருக்கான நிலை குறித்து நன்றாக தெரியும் என்றும் துவக்க வீரராக களமிறங்கும் அவரது முடிவு சிறப்பானது என்றும் அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மைக் ஹெசன் பாராட்டு

மைக் ஹெசன் பாராட்டு

மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் விராட் கோலி என்றும் அவருக்கு ஆட்டத்தின் நாடி துடிப்பு குறித்து நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ள ஹெசன், கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அதை நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி பார்ட்னர்ஷிப்பில் 95 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்ஷிப் குறித்து விமர்சனம்

கேப்டன்ஷிப் குறித்து விமர்சனம்

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 ஐபிஎல் சீசன்களில் பங்கேற்று விளையாடியுள்ள ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த தொடரிலும் ப்ளே-ஆப் சுற்றுவரை வந்து வெளியேறியது. இதையடுத்து விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள், விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Story first published: Thursday, April 1, 2021, 15:32 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+