For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி தற்காலிக ஓய்வு.. சச்சின் வழியை பின் தொடர கோலி முடிவு

மும்பை : சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி தற்காலிக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனை முறியடித்து ஐம்பதாவது சதத்தை தொட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக அறியப்படும் விராட் கோலி தற்போது உலகக்கோப்பை கிடைக்கவில்லை என்பதால் மனம் உடைந்து இருக்கிறார்.

 Virat kohli might take indefinite rest in odi and t20 cricket following sachin steps

இந்த நிலையில் தமக்கு வயது 35 ஆவதால் இனி வெள்ளை நிற கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை என்று விராட் கோலி முடிவெடுத்து இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி சச்சினின் வழியை பின் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் முடிவை எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 14,000 ரன்களை விராட் கோலி தொட உள்ளார். 50 சதம் அடித்து உள்ளார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் வெறும் 8676 ரன்கள் தான் அடித்திருக்கிறார். சதம் 29 தான் அடித்திருக்கிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அதில் தன்னுடைய ரெக்கார்டை மேம்படுத்தும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளார். வரிசையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இனி 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் நடைபெற உள்ளது. இதனால் அடுத்த எட்டு மாதத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட போகும் தமது முடிவை பிசிசிஐ இடம் கோலி தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் வெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தி விளையாடினார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு பெரிய அளவில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்காத சச்சின் 2013ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே ரூட்டை விராட் கோலியின் கையில் எடுத்திருக்கிறார்.

Story first published: Wednesday, November 29, 2023, 21:11 [IST]
Other articles published on Nov 29, 2023
English summary
Virat kohli might take indefinite rest in odi and t20 cricket following sachin steps ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி தற்காலிக ஓய்வு.. சச்சின் வழியை பின் தொடர கோலி முடிவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+