Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ரோகித், கோலி - 3 பேரில் சிறந்த கேப்டன் யார்? யுவராஜ் சிங் பளிச் பதில்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்விக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் ஆடம கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் வெளிப்படையான கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். இந்திய அணி கடந்த 2000 ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றியை பெற்றிருக்கிறது.

இதற்கு ரோகித், விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் முக்கிய காரணமாக கருதப்படுகிறார்கள். இந்த சூழலில் சிறந்த கேப்டன் யார் என்று நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆஸ்திரேலியா அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட், தோனி தான் சிறந்த கேப்டன் என்று பதில் அளித்தார்.

ind vs ban kanpur test cricket rohit sharma virat kohli

இதேபோன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் இடம் கேட்கப்பட்டதற்கும் அவரும் தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறினார். இந்த சூழலில் யுவராஜ் சிங்கிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் தோனியின் பெயரை கூறாமல் ரோகித் சர்மா என்று பதில் அளித்தார்.

இது குறித்து பேசி அவர், ரோகித் சர்மாவின் பெயரை தான் நான் கூறுவேன். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரராக விளங்குகிறார். தனிப்பட்ட முறையில் ஒரு வீரராக என்னிடம் கேள்வி கேட்டாலும், நான் ரோகித் சர்மா பெயரைத்தான் கூறுவேன். ஏனென்றால் அவர் சிறந்த கேப்டன். தனி ஆளாக நின்று தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தையே மாற்றக்கூடிய திறன் உடையவர்.

இந்த மூன்று பேர்களில் சிறந்த கேப்டன் என்றால் என்னுடைய முதல் சாய்ஸ் ரோகித் சர்மா தான் என்று யுவராஜ் கூறினார். இதேபோன்று பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றும் என்றும் யுவராஜ் கூறினார். எனினும் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனம் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்டும் ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை கைப்பற்றும் என்று கூறினர்.

வெளிநாட்டு வீரர்களே தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறும் நிலையில், யுவராஜ் சிங் ரோகித் சர்மாவின் பெயரை கூறியிருக்கிறார். இதன் மூலம் தோனி மீது அவருக்கு இருக்கும் பகை காரணமாகவே அவர் இவ்வாறு பதில் கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அண்மையில் யுவராஜ் சிங் தந்தையும் தோனி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாடும் காலத்தில் யுவ்ராஜ் சிங்கும், தோனியும் உற்ற நண்பர்களாக இருந்த நிலையில், தோனி பிற்காலத்தில் யுவராஜ்க்கு போதிய ஆதரவு வழங்கவில்லை என்பதே அவருடைய மனக்குமுறலாக இருக்கிறது.

Story first published: Thursday, September 26, 2024, 18:43 [IST]
Other articles published on Sep 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+