Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை நான் திட்டவேயில்லை.. உண்மையை போட்டு உடைத்த ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்.. என்ன நடந்தது?

மும்பை : ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், விராட் கோலி இடையே நடந்த 2023 ஐபிஎல் மோதலுக்கு பின் நவீன் உல் ஹக் வெளியிட்ட சமூக வலைதள பதிவு பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அந்த பதிவில் நவீன் உல் ஹக், விராட் கோலியை மாம்பழம் என திட்டுகிறார் என சிலரும், விராட் கோலி விக்கெட் விழுந்ததை கொண்டாடும் வகையில் இனிப்பான மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடுகிறார் என சிலரும் அதற்கு அர்த்தம் சொல்லி பெரிய சர்ச்சையாக மாற்றினர். இந்த நிலையில், உண்மையில் என்ன நடந்தது என நவீன் உல் ஹக் விளக்கம் அளித்து இருக்கிறார்.

Virat Kohli : Naveen Ul Haq clarifies that he didnt mean Kohli as sweet mango

2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டியில் நவீன் உல் ஹக், பெங்களூர் அணி வீரர் முகமது சிராஜை சீண்டினார். அப்போது அது குறித்து கோபமடைந்த விராட் கோலி, நவீன் உல் ஹக்-உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் போட்டி முடிந்தவுடன் லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் - விராட் கோலி இடையே பெரும் வார்த்தை மோதல் வெடித்தது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே முக்கியமான போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது தொலைக்காட்சியில் அந்த விக்கெட் விழுந்தவுடன் மும்பை இந்தியன்ஸ் வீரரை காட்டி இருப்பார்கள்.

அந்த சம்பவம் நடந்த போது நவீன் உல் ஹக் மாம்பழம் சாப்பிடும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் விராட் கோலி விக்கெட் போனவுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர் திரையில் இருக்கும் காட்சி தெரிந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விராட் கோலி விக்கெட்டை கொண்டாடுகிறார். அவரை மாம்பழம் என திட்டி இருக்கிறார் என அவர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு சர்ச்சையை கிளப்பினர்.

தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள நவீன் உல் ஹக் , தனக்கு மாம்பழம் வேண்டும் என லக்னோ அணி உதவியாளரிடம் கேட்டதாகவும் அவர் அன்றைய இரவே அதை வாங்கி வந்ததாகவும், அப்போது தான் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டே மாம்பழத்தை சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் திரையில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவே இல்லை. மேலும், அதில் விராட் கோலி இல்லவே இல்லை மும்பை இந்தியன்ஸ் வீரர் தான் இருந்தார். ஆனால், மக்கள் அதை வேறு மாதிரி எடுத்துச் சென்று விட்டார்கள். அதனால், நான் அப்போது எதுவும் சொல்லவில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார் நவீன் உல் ஹக்.

இந்த ஐபிஎல் மோதலுக்கு பின் 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது நவீன் உல் ஹக்கை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து கோஷம் எழுப்பிய போது விராட் கோலி அவரை அணைத்து, கை குலுக்கி அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Story first published: Saturday, December 2, 2023, 17:12 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+