ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரரா சாதனை... சாதிக்க காத்திருக்காரு கிங்... நாமளும் காத்திருப்போம்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும்.

மேலும் இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஐபிஎல்லின் முதல் வீரராக ஒரு சாதனைக்காக காத்திருக்கிறார்.

உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு

10வது போட்டி

10வது போட்டி

ஐபிஎல்லின் 2021 தொடரின் இன்றைய 10வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் துவங்கவுள்ளது. இதனிடையே வார இறுதி தினமான இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வழக்கம் போல இரவு 7.30 மணிக்கு துவங்கும்.

முதலிடத்திற்கு ஆர்சிபி தீவிரம்

முதலிடத்திற்கு ஆர்சிபி தீவிரம்

இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 3ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி உள்ள நிலையில், முதலிடத்திற்கு மீண்டும் முன்னேற ஆர்சிபி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.

6வது இடத்தில் கேகேஆர்

6வது இடத்தில் கேகேஆர்

இன்றைய போட்டியில் 2வது இடத்தில் உள்ள ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கேகேஆர் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. கேகேஆர் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இதையடுத்து இந்த இரு அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அது மட்டுமின்றி மற்றொரு காரணத்திற்காகவும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எப்போதும் சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ள ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு இன்றைய போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

6000 ரன்களுக்கு விராட் வெயிட்டிங்

6000 ரன்களுக்கு விராட் வெயிட்டிங்

ஐபிஎல்லில் முதல் வீரராக 6000 ரன்களை குவிக்க விராட் கோலிக்கு இன்னும் 56 ரன்களே மீதம் உள்ளது. இதனிடையே, கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் ஐபிஎல்லில் இதுவரை 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14 போட்டிகளில் கேகேஆர் அணியும் 12 போட்டிகளில் ஆர்சிபியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB & KKR teams have played 26 matches against each other in IPL, of which 14 have been won by KKR and RCB have won the remaining 12 games
Story first published: Sunday, April 18, 2021, 14:57 [IST]
Other articles published on Apr 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X