Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்துடன் என்ன மன கசப்பு..??.. விராட் கோலி அளித்த பதிலால் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

மும்பை: கேப்டன் பதவியால் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இடையே பிரச்சினை எற்பட்டதாக செய்திகள் வெளியானது

Recommended Video

Kohli Press Conference speech on Captaincy Issue with Rohit | OneIndia Tamil

அதற்கு ஏற்றார் போல், டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் விலகியதும், ஒருநாள் போட்டியிலிருந்து கோலி விலகியதும் , எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்தது.

Virat kohli on Playing under Rohit sharma captaincy

இதனால் கடந்த ஒரு வாரமாக இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்தன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.இதன் மூலம் பல சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைத்தார் விராட் கோலி. ரோகித் சர்மா குறித்து கேள்வி வந்த போது, அவர் காயத்திலிருந்த விரைவில் குணமடைய வேண்டும் என்றும், ரோகித் சர்மாவின் அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்வோம் என்று கூறினார்..

அதோடு விராட் கோலி நிற்கவில்லை, ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டன் என்பதை வாய்ப்புகள் கிடைத்த போது எல்லாம் நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் அவரது செயல்பாடு குறித்து அனைவருக்கும் தெரிந்ததே என்று விராட் கோலி கூறினார்

மேலும் ரோகித் சர்மாவும், டிராவிட்டும் இணைந்து இந்திய அணிக்கு பல வெற்றிகள் வாங்கி தருவார்கள் என்று குறிப்பிட்ட விராட் கோலி, இந்திய அணிக்கு தொடர்ந்து எனது பங்களிப்பு இருக்கும் என்று கூறினார். கேப்டன் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன் என்று விராட் கோலி தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனக்கும், ரோகித்துக்கும் பிரச்சினை இருப்பதாக பத்திரிகையாளர்கள் தான் கூறி வருவதாகவும், அப்படி ஒரு பிரச்சினை இருவருக்கும் இடையில் இல்லை என்று பல முறை கூறி அழுத்து போய்விட்டதாகவும் விராட் கோலி கூறினார். ரோகித் சர்மா குறித்து விராட் பேசிய போது தென்மதுரை வைகை நதி தினம் பாடும் பாட்டு என்ற மியூச்சை போட்டு இருந்தால், நிச்சயம் சரியாக இருந்திருக்கும். எப்படியோ சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டது.

Story first published: Wednesday, December 15, 2021, 18:35 [IST]
Other articles published on Dec 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+