Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா அடிச்சிப்பாரு.. சீண்டிய பால்க்னரை சிக்சரால் சிதைத்த கோஹ்லி!

மெல்போர்ன்: ஸ்லெட்ஜிங்கில் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஸ்லெட்ஜிங்கிலேயே பதில் சொல்லியதோடு, பேட்டாலும் பதில் கூறி கடுப்பேற்றியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் விராட் கோஹ்லி.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3வது ஒன்டே கடந்த ஞாயிறன்று, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

விராட் கோஹ்லி சிறப்பாக பேட் செய்து 73 ரன்கள் எடுத்து சதம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தருணம் அது. 35வது ஓவரை வீசிய, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் சிங்கிள் எடுத்து ஓடிவந்த கோஹ்லியை பார்த்து 'எனது பந்தை அடி பார்ப்போம்' என கூறி சீண்டினார்.

பலமுறை அடிச்சாச்சுப்பா

பலமுறை அடிச்சாச்சுப்பா

ஆனால், கோஹ்லி சளைத்தவர் கிடையாதே. ஜேம்ஸ் பால்க்னரை கூப்பிட்டு, "உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். எனது வாழ்க்கையில், உங்கள் பந்தை பலமுறை அடித்து துவைத்துவிட்டேன். பேசாமல் போய் பந்த போடுப்பா" என கலாய்த்து அனுப்பினார்.

அவமானப்பட்ட பால்க்னர்

அவமானப்பட்ட பால்க்னர்

ஸ்லெட்ஜிங் செய்ய வந்து, கடைசியில் மூக்கறுபட்டு திரும்பினார் ஜேம்ஸ் பால்க்னர். இப்போட்டியில் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். இருப்பினும், 2வதாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்தியா நிர்ணயித்த ஸ்கோரை விரட்டி பிடித்தது.

இன்று நான்காவது போட்டி

இன்று நான்காவது போட்டி

இந்நிலையில், இன்று கான்பெரா நகரின் மனுகா ஓவல் மைதானத்தில் 4வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.

தவான், கோஹ்லி அசத்தல்

தவான், கோஹ்லி அசத்தல்

இதையடுத்து இந்தியா இரண்டாவதாக பேட் செய்தது. ரோகித் ஷர்மா விரைவில் வெளியேறினாலும், ஷிகர் தவான் மற்றும் கோஹ்லி இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

பால்க்னரின் பந்து

பால்க்னரின் பந்து

25வது ஓவரின் முதல் பந்தை பால்க்னர் வீசுவதற்கு வந்தார். அப்போது கோஹ்லி 68 ரன்களுடன் களத்தில் நின்றார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்லோ பந்தாக வீசினார் பால்க்னர். பொதுவாக பால்க்னர் தலைக்கு பின்புறமாக கையை கொண்டுவந்து மணிக்கட்டை தலைகுப்புற கவிழ்த்து வீசும் ஸ்லோ பந்துகளை கணிப்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினம்.

இமாலய சிக்சர்

இமாலய சிக்சர்

ஆனால், பால்க்னர் பந்தை வீசியதும், பிட்சை விட்டு இறங்கி வந்தார் கோஹ்லி. ஸ்லோ பந்து என்பதை உணர்ந்த பிறகும், சளைக்காமல், ஹாப்-வாலியாக கிடைத்த அந்த பந்தை மடக்கி அடித்தார். அடித்த வேகத்தில் பந்து 103 மீட்டர் தூரத்தில் போய் விழுந்து சிக்சரானது.

நக்கல் சிரிப்பு

நக்கல் சிரிப்பு

பந்தை அடித்ததுமே அது சிக்சர்தான் என்பதை உணர்ந்த கோஹ்லி, பந்து எங்கு செல்கிறது என்பதை பார்க்காமல், பால்க்னரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார். பால்க்னரும், கோஹ்லி முகத்தை பார்த்தபோதும், அவமானம் தாங்காமல் உடனே பந்து சென்ற திசையை நோக்கி முகத்தை திருப்பிக்கொண்டார்.

வச்சி செய்வாங்களோ

இதன்பிறகு தவானும், நமட்டு சிரிப்புடன் கோஹ்லியின் கைகளில் தனது கைகளால் முட்டி, சபாஷ் சொல்லி திரும்பினார். ஆஸி. வீரர்கள் முகங்களில் அப்போது ஈ ஆடவில்லை. ஒரு ரசிகர் இந்த நிகழ்வை இப்படி டிவிட் செய்திருந்தார் "103 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்துள்ளார் கோஹ்லி. ஒருவேளை பால்க்னரை இன்னும் போதிய அளவு அடிக்கவில்லை என்று கோஹ்லி நினைக்கிறார் போலும்".

Story first published: Wednesday, January 20, 2016, 17:03 [IST]
Other articles published on Jan 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+