Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க வாழ்க்கை படமாக்கப்பட்டால் யாரு ஹீரோவாக வேண்டும்.. கோலி சொன்ன நச் பதில்.. IPL சிறந்த வீரர் யார்?

மொஹாலி : ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்று பெருமையை பெற்றவர் விராட் கோலி.முதல் சீசனில் இருந்து பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்று தந்ததில்லை.

இதனால் மனமுடைந்த விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.இந்த நிலையில் ஜியோ சினிமா ஆப்புக்கு விராட் கோலி பேட்டி கொடுத்திருக்கிறார். இதில் ஐபிஎல் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.

Virat Kohli opens up about various question regarding IPL

இது ஐபிஎல் தொடரிலே அதிகம் பாராட்டப்படாத பேட்ஸ்மேன் யார் என கேள்வி கேட்கப்பட்டதற்கு விராட் கோலி அம்பத்தி ராயுடு என பதில் அளித்தார். இதைப் போன்று ஐபிஎல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டர் சேன் வாட்சன் என்றும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் என்றும் எந்த அணிக்கு எதிராக நீங்கள் விளையாட அதிக ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்றும் கோலி பதிலளித்தார்.

காரணம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதால் நான் அவர்களுடன் உரையாட ஆசைப்படுவேன் என் கூறினார். மேலும் ஐபிஎல் தொடரிலே சிறந்த வீரர்கள் என்றால் அது டிவில்லியர்ஸ் மற்றும் மலிங்கா தான் என கோலி பதிலளித்துள்ளார்.இதைப் போன்று உங்களுடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் யார் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என கேட்கப்பட்டது.

Virat Kohli opens up about various question regarding IPL

அதற்கு நான் என்னையே தேர்வு செய்வேன் என்று கூறி கோலி சிரித்தார். இதேபோன்று தோனியிடமிருந்து நீங்கள் மூன்று விஷயத்தை கெஞ்சியோ, கடனாகவோ இல்லை திருடவோ நினைத்தால் என்ன கேட்பீர்கள் என கோலி இடம் கேட்கப்பட்டது. அதற்கு கோலி, தோனியின் தொடை மற்றும் கால் சதைகள் மற்றும் அவரிடம் இருக்கும் அமைதி ஆகியவற்றை கேட்பேன் என கூறியுள்ளார். தோனி மிக வேகமாக ஓடக்கூடியவர். அதற்கு அவருடைய கால்கள் மிகவும் வலுப்பெற்றதாக இருக்கும் என்பதனால் விராட் கோலி இந்த பதிலை கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 20, 2023, 13:39 [IST]
Other articles published on Apr 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+