Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்கள்.. யோ யோ டெஸ்ட் மூலம் பதிலடி.. கோலி புது ரெக்கார்ட்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள்.

உலகக் கோப்பைக்கு இன்னும் 40 நாட்களை உள்ள நிலையில் இந்தத் தொடர் அதற்குப் பயிற்சிக்களமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Virat kohli passed the yo yo test with record mark and rohit sharma clears fitness test

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு ஒரு மாத காலம் ஓய்வில் இருந்து வந்த இந்திய வீரர்கள் தங்களது உடல் தகுதியை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை சோதிக்க பெங்களூரு பயிற்சி முகாமில் ஒவ்வொருவருக்கும் யோ யோ சோதனை நடந்தது. யோ யோ டெஸ்ட் என்பது வீரர்களின் உடல் தகுதியை சோதிக்கும் தேர்வில் முதன்மையானதாகும். வீரர்கள் எந்த அளவிற்கு ஸ்டாமினா உடன் இருக்கிறார்கள். எவ்வளவு நேரம் ஒரே அளவில் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறார்கள் என்பதை யோ யோ டெஸ்ட் தெரியப்படுத்தும். இந்த நிலையில் இந்த டெஸ்ட் இருப்பதால்தான் அஸ்வின் போன்ற வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பெற முடியவில்லை. ரோகித் சர்மாவை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என்று கூறி உருவ கேலி செய்வார்கள். ரோகித் சர்மா யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற மாட்டார் என ரசிகர்கள் கிண்டல் அடித்தனர். ஆனால் நேற்று பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்று ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் ஹர்திக் பாண்டியாவும் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்று விட்டார்.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் அனைவரையும் விட இந்த டெஸ்டில் முதன்மையானதாக வந்திருப்பவர் விராட் கோலி தான். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி யோ யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்த டெஸ்டில் 17 மதிப்பெண்ணை பெறுவது மிகவும் கடினமாகும். ஆனால் விராட் கோலி மட்டும் தான் இதனை தற்போது எட்டி இருக்கிறார். முன்னதாக மணிஷ் பாண்டே இது போன்ற ஒரு ஸ்கோரை பெற்றிருந்த நிலையில் அதனை தற்போது விராட் கோலி முறியடித்திருக்கிறார்.

Story first published: Friday, August 25, 2023, 9:41 [IST]
Other articles published on Aug 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+