ரோகித் சண்டையை பத்தி கேள்வி கேட்டால்..? பிரஸ் மீட்டில் இருந்து எஸ்கேப் ஆக கோலி முடிவு..?
Recommended Video
மும்பை: ரோகித் சண்டை பற்றிய கேள்விகளை தவிர்க்கவே, செய்தியாளர்களை சந்திப்பை தவிர்க்க கோலி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக கோப்பை தொடரின் முடிவில், கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் முயற்சி செய்ததாகவும், கோலி அதை தடுக்க விடுமுறையை ரத்து செய்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை, ரோகித் சர்மா அன் பாலோ செய்தார். அதற்கு பதிலடியாக அனுஷ்கா, ஒரு பதிவை போட்டு சூசகமாக ரோகித் பற்றி குறிப்பிட்டார். அவர்களிடையேயான இந்த மோதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்திய அணி பயணம்
இந்நிலையில், நாளை இந்திய அணி அமெரிக்கா கிளம்ப உள்ளது. ஒவ்வொரு வெளிநாட்டு தொடருக்கு முன்பும் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பை சந்தித்து வரும் கோலி, இந்த முறை செய்தியாளர்களின் கேள்விகளை புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உறுதியானது
முன்னதாக இதனை உறுதி செய்யும் வகையில் புரோ கபடி விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அங்கே முன்பே திட்டமிடப்பட்டு இருந்த செய்தியாளர்கள் சந்திப்பை கோலி ரத்து செய்துள்ளார்.

வேண்டாம் என முடிவு
மேலும் நாளை இந்திய அணி கிளம்பவுள்ள நிலையில், பிரஸ் மீட் கொடுக்க வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித்துக்கும், கோலிக்கும் இடையே மோதல் என்ற செய்தி கடந்த சில தினங்களாக பரவி பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்து கொடுத்துள்ளது.

தவிர்க்கவே ஐடியா
எனவே பிரஸ் மீட்டில் கலந்துகொண்டால் ரோகித்துடனான மோதல் குறித்து கேள்விகள் எழும். அதற்கு பதில் சொல்லி மேலும் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்னையை தவிர்க்கவே, பிரஸ் மீட்டே கொடுக்க வேண்டாம் என்று கோலி முடிவவு எடுத்துள்ளார் என் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications