'ஜிம்'முக்குப் போய் ஜம்முன்னு தயாராகும் கோஹ்லி.. 2-வது "அட்டாக்"குக்கு ரெடியாகும் இந்தியா!
கிங்ஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தான் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி மேற்கு இந்திய தீவுகள் அணிகளின் பந்து வீச்சை சிதறடித்தார். அப்போட்டியில் அவர் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

2வது டெஸ்ட் போட்டி
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா தற்போது கிங்ஸ்டன் சென்றுள்ளது. இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

ஜிம்மில் கோஹ்லி
இந்நிலையில் கோஹ்லி ஜிம்மில் உடற்பயிற்சியின் செய்யும் போது கடினமாக பளு தூக்குவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடினமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விராத் கோஹ்லி, பளுதூக்கும் பாரில் அதன் இரண்டு புறமும் தலா 10 கிலோ வெயிட் பொறுத்தி தூக்குகிறார்.
எதிர்மறை எண்ணங்கள்
முன்னதாக விராத் கோஹ்லி, தகுதியற்ற உடல் நிலை, எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் என தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பஸ் அனுபவம்
இதேபோல, தனது ட்விட்டர் பக்கத்திலும் விராத் கோஹ்லி புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் இந்திய அணி வீரர்கள் செல்லும் பேருந்து குறித்து பதிவிட்டுள்ளார். அணியின் பேருந்தில் சிறந்த தருணங்களை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications