அவ்வளவு சாதாரணமா நினைக்காதீங்க.. அந்த பையன் தான் 20 ஓவர் போட்டியின் எதிர்காலம்
புளோரிடா: வருங்காலங்களில் டி 20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் முக்கிய வீரராக இருப்பார் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டி நேற்று புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். அதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.

இந்தியா வெற்றி
அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மழை தொடர்ந்து நிற்காமல் பெய்ததால் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முழுமையான ஆட்டம்
போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது : முழுமையான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம்.

சிறப்பான ஆட்டம்
புதிய பந்தில் சிறப்பாக விளையாடினோம். ஜடேஜா, கருணால் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 160 ரன்கள் கடந்தோம். அதேபோன்று இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசுகிறார்.

நம்பிக்கை
அவர் அவருடைய பணியை மிக சிறப்பாக செய்கிறார். விரைவில் அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என்று இரண்டிலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications