"கபாலி" ஜுரத்திற்கு மத்தியிலும் வெளுத்து வாங்கிய அஸ்வின்.. சூப்பர்ப் சதம்!
ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் இந்தியா அசத்தியது. கேப்டன் விராத் கோஹ்லி டபுள் செஞ்சுரி போட்ட நிலையில் இன்று அஸ்வின் சதமடித்துக் கலக்கி விட்டார்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆடி வருகிறது. 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்களுடன் களத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தின் சிறப்பே அஸ்வின் போட்ட சதம்தான். அட்டகாசமாக ஆடிய அவர் 113 ரன்களைக் குவித்தார். இது அவருக்கு 3வது டெஸ்ட் சதமாகும். முன்னதாக நேற்றைய ஆட்ட நாள் இறுதியில் 143 ரன்களுடன் இருந்த கோஹ்லி இன்று அபாரமான இரட்டை சதத்தைப் போட்டு அசத்தினார். ஆனால் சரியாக 200 ரன்களுடன் அவர் நடையைக் கட்ட நேரிட்டது.
கடந்த 84 ஆண்டுகளில் வெளிநாடு ஒன்றில் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஒருவர் சதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலி ஜூரத்திற்கு மத்தியில்
அஸ்வின் ஒரு ரஜினி ரசிகர். கபாலி படத்தை முதல் நாளே பார்க்க முடியவில்லை என்று ஆதங்கத்திலும் இருந்தார். இதை வைத்து மீம்ஸும் புகுந்து விளையாடியது. இந்த நிலையில் அவர் சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவூட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications