For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரைசதம் கடந்த விராட் கோலி.. புதிய சாதனை படைத்தார்.. மற்றொரு மைல்கல்லையும் எட்டி அசத்தல்

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 35 ரன்கள் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ஜோடி சேர்ந்த சுப்மன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

அரைசதம்

அரைசதம்

42 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா பெவிலியன் திரும்ப , நட்சத்திர வீரர் சுப்மன் கில் சதம் அடித்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 128 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நிற்கிறார்.இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

5வது இடம்

5வது இடம்

கோலிக்கு துணையாக ஜடேஜா 54 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களுடன் இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து 191 ரன்கள் பின் தங்கி உள்ளது. இந்த இன்னிங்சின் போது விராட் கோலி இன்று இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார். சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

மைல்கல்

மைல்கல்

மேலும் 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 4000 ரன்களை என்ற மைல் கல்லை கடந்துள்ளார். இதில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 94 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7216 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இந்த சாதனையை 193 இன்னிங்ஸில் விராட் கோலி படைத்திருக்கிறார்.

அதிவேகம்

அதிவேகம்

சச்சின், காலிஸ் 193 இன்னிங்ஸில் தான் 9000 ரன்களை கடந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது வெறும் 41 ரன்கள் தான் அவருக்கு சதம் பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, March 11, 2023, 18:50 [IST]
Other articles published on Mar 11, 2023
English summary
Virat kohli Reached 2 milestones in ahmedabad test அரைசதம் கடந்த விராட் கோலி.. புதிய சாதனை படைத்தார்.. மற்றொரு மைல்கல்லையும் எட்டி அசத்தல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+