Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்கா ரெடியா.. அப்ப நானும் ரெடிதான்... என்ன இப்படிச் சொல்லிட்டாரு விராட் கோலி

மும்பை: என்னோட சுயசரிதையை படமாக்கினால் அதில் எனது கேரக்டரில் நானே நடிக்க ரெடிதான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என்னோட மனைவி ரோலில் அனுஷ்காவே நடிக்கணும் என்று கூறியுள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் ஷோவில் கலந்து கொண்டார் கோலி. அப்போதுதான் இதுதொடர்பான கேள்வி எழுந்தது. அதற்குத்தான் மேற்கண்டவாறு பதிலளித்தார் கோலி.

பல்வேறு சமாச்சாரங்கள் குறித்து சேத்ரியும், கோலியும் உரையாடினர். இருவரது பேட்டியில் அவர்கள் பரிமாறிக் கொண்ட பல விஷயங்களில் இந்த பயோ பிக் படமும் ஒன்று.

பயோபிக்கில் நடிக்க நான் ரெடி

பயோபிக்கில் நடிக்க நான் ரெடி

பேட்டியின்போது உங்களது பயோபிக்கில் விராட் கோலி வேடத்தில் நீங்களே நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, அதற்கு நான் தயார்தான். அதில் பிரச்சினையே இல்லை. ஆனால் ஒரு கண்டிஷன். அனுஷ்காவும் அவரது ரோலில் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார் கோலி. அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க நான் எப்பவுமே தயார் என்றார் அவர்.

ஆனால் அனுஷ்கா இருக்கணும்

ஆனால் அனுஷ்கா இருக்கணும்

ஏன் அப்படி என்று கேட்டபோது, எனது வாழ்க்கையில் அனுஷ்காவின் தாக்கம் அதிகம். எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அடுத்தவர்களிடம் எப்படி இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுள்ளேன். எப்போதும் அனுஷ்கா என்னுடன் இருக்க வேண்டும். அவரைப் பார்த்த அடுத்த நொடியே இதை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறினார் கோலி.

அவர் மாதிரி வாழணும்

அவர் மாதிரி வாழணும்

ஒருவரை நேசிப்பது என்பது அவர் மீதான பாசம் மட்டுமல்ல, அவரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு வர வேண்டும். அது அனுஷ்காவைப் பார்த்ததுமே நான் உணர்ந்து கொண்டேன். எனக்கே என் மீது நிறைய நம்பிக்கை வந்தது அதன் பிறகுதான். அவர் என்னிடம் காட்டிய பரிவும் அதற்கு முக்கியக் காரணம். நான் யார் என்பதை எனக்கு உணர்த்தியவர் அனுஷ்கா என்றும் கோலி கூறியுள்ளார்.

மாறலாம் தப்பில்லை

மாறலாம் தப்பில்லை

நல்லதுக்காக நிறைய மாற்றங்களைச் செய்வது நல்லது என்று காட்டியவர் அனுஷ்காதான். யாராவது நம்மிடம் பிரச்சினை என்று வந்தால் அதற்குரிய தீர்வை நாம் கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும். அதை நான் எப்போதுமே செய்வேன். அதை எனக்கு உணர்த்தியவரும் கூட அனுஷ்காதான் என்று மனைவியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி விட்டார் கோலி.

சூப்பர் சச்சின்

சூப்பர் சச்சின்

சரி அனுஷ்காவை விடுங்க..லிஸ்ட்ட் பெருஸ்ஸா போயிட்டிருக்கு.. உங்களுக்குப் பிடித்த சச்சின் டெண்டுல்கரின் சூப்பர் இன்னிங்ஸ் எது என்று சேத்ரி கேட்டதற்கு அதை விட ஆர்வமாக பதிலளித்தார் கோலி. 1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த போட்டியில் சச்சின் விளையாடிய அதிரடி ஆட்டம்தான் என்று கோலி பதிலளித்தார். அப்போட்டியில் 131 பந்துகளில் 143 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார் சச்சின்.

Story first published: Monday, May 18, 2020, 14:50 [IST]
Other articles published on May 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+