Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

46வது சதம் விளாசிய கோலி.. சச்சினின் மூன்று பெரிய சாதனைகள் முறியடிப்பு.. 390 ரன்கள் எட்டிய இந்தியா

திருவனந்தபுரம் : இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி இமாலய இலக்கை எட்டியது.

2019 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாச தடுமாறிய விராட் கோலி தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 4 இன்னிங்சில் 3 சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக சுப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர்.

சுப்மான் அதிரடி

சுப்மான் அதிரடி

சுப்மான் கில், ரோகித் ஜோடி பெரிய இலக்கை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடியது . குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டத்தில் 10வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். எனினும் ரோகித் சர்மா 42 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சுப்மான் கில் 52 பந்தில் அரைதம் கடந்தார்.

சுப்மான் கில் சதம்

சுப்மான் கில் சதம்

இதனையடுத்து, விராட் கோலியும், சுப்மான் கில்லும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடக்க வீரர் சுப்மான் கில் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவருக்கு நன்றாக கம்பெனி கொடுத்த கோலி 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், சுப்மான் கில் 116 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

கோலியின் 46வது சதம்

கோலியின் 46வது சதம்

எனினும் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினார். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திய கோலி பவுண்டரியாக மாற்றினார். இதன் மூலம் விராட் கோலி 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய 46வது சதத்தை விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களும், கேஎல் ராகுல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

 இமாலய இலக்கு

இமாலய இலக்கு

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி 5 முறை 150 ரன்களுக்கு மேல் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்ததன் மூலம், விராட் கோலி 8 சிக்சர்களை அடித்தது, அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது.

கோலி உடைத்த சாதனை

கோலி உடைத்த சாதனை

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46வது சதத்தை 452 வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும், சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.

Story first published: Sunday, January 15, 2023, 17:48 [IST]
Other articles published on Jan 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+