Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Virat kohli:விராட் கோலியை இனி எப்போது இந்திய அணியில் பார்க்க முடியும்..அடுத்த ஒருநாள் தொடர் எப்போது?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த விராட் கோலி, தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளார்.

இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இனி சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டும்தான் விளையாடப் போகிறார்கள். இந்த சூழலில் இந்திய அணி அடுத்தது எப்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போகிறது என்பதை பார்க்கலாம்.

Virat kohli Next Match

தற்போது ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூன் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறும். இதனால் விராட் கோலியை இனி நாம் அடுத்து மூன்று மாதத்திற்கு பார்க்க முடியாது.

இதன்பின் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. எனினும் பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்திய அணி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனால் வங்கதேச சுற்றுப்பயணமும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்தாலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா அந்தத் தொடரில் விளையாட மாட்டார்கள். இந்த தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் நடைபெற இருக்கிறது.

ஒரு வேலை இந்த தொடர் நடைபெற்று கோலி, ரோகித் பங்கேற்றால் 17ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் இருவரையும் நாம் பார்க்கலாம். அதன் பிறகு இந்திய அணி அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக நமது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் ஒரு நாள் தொடர் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஆகஸ்ட் மாதம் அவர்கள் விளையாடவில்லை என்றால் இனி அக்டோபர் மாதம் தான் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார்கள்.

இந்த தொடர் முடிவடைந்த உடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரும் நவம்பர் 30ஆம் தேதி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த வகையில் நடப்பாண்டில் இந்திய அணி வெறும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடுகிறது. இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலியை இனி நாம் குறைவான காலத்திலே இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்கப் போகிறோம். இந்த சூழலில் 2027ஆம் ஆண்டு உலககோப்பை வரை தான் கோலி, ரோகித் விளையாட போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 12, 2025, 16:06 [IST]
Other articles published on May 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+