For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆமா.. எங்க பேட்டிங்கில் ஓட்டை இருக்கு..! சிலர் இஷ்டத்துக்கு ஆடறாங்க..! பொங்கி தள்ளிய கோலி…!!

Recommended Video

IND VS WI Test 2019 | Kohli | இந்திய பேட்டிங் பற்றி விமர்சனம் செய்த கோஹ்லி- வீடியோ

ஆன்டிகுவா: இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தடுமாற்றம் இருக்கிறது. அணியின் பேட்டிங்கில் முழு பலம் இல்லை என்று கேப்டன் விராட் கோலி முதன் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கும் இடையே இன்னும் டெஸ்ட் தொடர் பாக்கி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை இந்தியா சந்திக்கிறது.

கடினம் தான்

கடினம் தான்

இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அறிமுகத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

2 ஆண்டுகள் முன்னேற்றம்

2 ஆண்டுகள் முன்னேற்றம்

பொதுவாக டெஸ்ட் போட்டிகள் சுவராஸ்யமற்றவை என்ற ஒரு எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. நான் சொல்வது வேறு... என்னைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் தரம் அனேகமாக முன்னேற்ற பாதையில் சென்றிருக்கிறது.

ஒன்றிணைய வில்லை

ஒன்றிணைய வில்லை

இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக அனைவரும் ஒன்றிணைந்து சரியாக விளையாட வில்லை. தனித் தனியாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

சவால் வெயிட்டிங்

சவால் வெயிட்டிங்

ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் சிறந்து விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது சற்று கடினம். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் கடுமையான சவால் காத்திருக்கிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

அதாவது பேட்டிங் இன்னும் சவாலாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் பேட்டிங் முக்கியத் துவம் பெறுகிறது. அணியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து முன்னேற்ற பாதைக்கு இந்தியா திரும்பும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Story first published: Wednesday, August 21, 2019, 10:23 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
There is failure in our batting order says captain virat kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+