Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் கலக்குவது எப்படி? விராட் கோலி சொன்ன ரகசியம்.. கடந்த காலத்துக்கு " நோ" சொன்ன கோலி

நடப்பு டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான், நெதர்லாந்து வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக விராட் கோலி அரை சதம் அடித்து அசத்திருக்கிறார்.

இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்திருக்கிறார்.

நல்ல நாள்

நல்ல நாள்

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய விராட் கோலி, இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தது. சிறிய வித்தியாசத்தில் தான் நாங்கள் வென்றிருக்கிறோம். வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இவ்வளவு அருகில் சென்று தான் வெல்வோம் என்று நாங்கள் நினைக்கவில்லை .பேட்ஸ்மேன் ஆக இன்று எனக்கு நல்ல நாளாக இருந்தது.

நெருக்கடி

நெருக்கடி

நான் களத்திற்கு வந்தபோது எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது. என்னுடைய உள்ளுணர்வு படி தான் விளையாடினேன். தவறு நடந்து விடும் என்று அஞ்சி என் உள்ளுணர்வை பாதிக்க நான் விரும்பவில்லை. பழையதை நான் நினைத்து என்னை ஒப்பிட்டுக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நான் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சிறப்பான மைதானங்கள்

சிறப்பான மைதானங்கள்

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நீங்கள் சில ஷாட்களை ஆடினால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று 19வது ஓவரில் நான் அடித்த சிக்ஸர் அதற்கு நல்ல உதாரணம். இதுவே இந்தியாவிலோ, இல்லை துபாயிலோ நடைபெறும் போட்டியில் இதுபோன்ற ஷாட்களை ஆட முடியாது.

என் சொந்த வீடு

என் சொந்த வீடு

ஆஸ்திரேலியாவில் டி20, டெஸ்ட் என எந்த பந்தை பார்த்து அதற்கு ஏற்ற மாதிரி ஷாட்களை ஆடினாலும் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். அதில் கிரிக்கெட் மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானங்களில் ஒன்று. இங்கு வந்தால் எனது சொந்த வீட்டிற்கு வருவது போல் ஒரு உணர்வு கிடைக்கும். நான் எப்போது எல்லாம் அடிலெய்ட் வருகிறதோ அப்போதெல்லாம் நான் பேட்டிங் செய்ய மிகவும் விரும்பி விளையாடுவேன் .

Story first published: Wednesday, November 2, 2022, 20:26 [IST]
Other articles published on Nov 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+