
நெருக்கடி
நீங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. கொரோனா காலகட்டம் என நிறைய இருந்தது. நாம் எண்களை தான் மிகவும் பார்ப்போம் என்று எனக்கு தெரியும். எனினும் சதம் அடிக்காதது குறித்து உங்கள் மனதில் என்ன நினைத்தீர்கள் என்று விராட் கோலியிடம் டிராவிட் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த விராட் கோலி, உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் பேட்டிங்கில் தடுமாறும் போது எல்லாம் என்னை நானே நெருக்கடிக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தேன்.

திருப்தி இருக்காது
மூன்று இலக்கம் ரன்களை தொட முடியவில்லை என்ற ஆதங்கம் ஒரு பேட்ஸ்மேனாக எனக்குள்ளே அதிகமாகி கொண்டு இருந்தது. அந்த எண்ணத்தை மேலோங்க நானும் ஓரளவுக்கு விட்டு விட்டேன். நான் எப்போதுமே 40, 45 ரன்கள் எடுத்து திருப்தி அடையும் வீரர் கிடையாது. என் அணிக்காக சிறப்பாக செயல்படுவது பெருமையாக நினைப்பேன். அதற்காக விராட் கோலி தான் அணியில் தெரிய வேண்டும் என்று நினைப்பவனும் கிடையாது.

என்னையே திண்றது
நான் 40 ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போதே என்னால் 150 ரன்கள் எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும். அப்படி இருந்தும், நான் ஏன் அணிக்காக பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை என்ற கேள்வி என்னை தின்று கொண்டு இருந்தது. கடினமான களத்தில் நின்று அணிக்காக விளையாடி இருக்கிறேன். ஆனால் தற்போது என்னால் அப்படி விளையாட முடியவில்லை என்ற நினைப்பு என்னை மிகவும் உறுத்தியது. எப்படி உங்களால் சதம் அடிக்க முடிகிறது என்று எப்போதுமே பலர் கேட்பார்கள்.

அனைவரும் கேட்கிறார்கள்
நான் மைல்கல்லிற்காக கிரிக்கெட் விளையாடவில்லை. அணியின் வெற்றிக்காக நான் விளையாடும் போது சதங்கள் எனக்கு கிடைக்கிறது. நான் எப்போதுமே ஆடுகளத்தில் விளையாடும் போது நம்மால் முடிந்த அளவு நீண்ட நேரம் அணிக்காக விளையாட வேண்டும் என்று தான் நினைப்பேன். ஆனால் உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஹோட்டல் லிப்ட்டில் இருப்பவர், பஸ் டிரைவர் என அனைவருமே எங்களுக்கு சதம் வேண்டும் என்று கேட்கும் போது அது நிச்சயமாக எனது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த சவால்களை எல்லாம் தாண்டி தான் நான் ரன்கள் அடிக்க வேண்டும் விராட் கோலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











