Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோஹித்தை விட ஜடேஜாவுக்கு அதிக சம்பளம்.. கில்லுக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ ஒப்பந்தம் மாற்றம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025-26ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை இன்று (பிப்ரவரி 9, 2026) வெளியிட்டுள்ளது. இதில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உயர் நிலையில் இருந்து கீழிறக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா மூத்த வீரராக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட கூடுதலாக 2 கோடி சம்பளம் பெற உள்ளார். இவர்கள் மட்டுமின்றி, அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலக்கட்டத்திற்கான இந்த ஒப்பந்தத்தில், பல இந்திய அணி வீரர்களின் தரவரிசை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Virat Kohli Rohit Sharma demoted in BCCI Contracts Ravindra Jadeja earns more Shubman Gill Elevates

'ஏ பிளஸ்' பிரிவு ரத்து.. டாப் இடத்தில் மூவர்!

வழக்கமாக வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமான 'ஏ பிளஸ்' (A+) பிரிவை பிசிசிஐ இம்முறை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக 'கிரேட் ஏ' பிரிவுதான் இனி உயர்ந்த பிரிவாகக் கருதப்படும்.

இந்த 'கிரேட் ஏ' பிரிவில் வெறும் மூன்று வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்:

  • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில்.
  • ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

இதன் மூலம் சுப்மன் கில் இந்திய அணியின் மிக முக்கிய முகமாக மாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோஹித், கோலிக்குச் சறுக்கல்

இந்திய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 'கிரேட் பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே விளையாடி வருவதால் (டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைக் கருத்தில் கொண்டு), இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு மிக உயர்ந்த பிரிவில் இருந்த இவர்கள், தற்போது இரண்டாம் கட்டப் பிரிவிற்குச் சென்றுள்ளது ரசிகர்களுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷமிக்கு இடமில்லை

மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒப்பந்தப் பட்டியலிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இஷான் கிஷனுக்கும் இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

பிசிசிஐ புதிய ஒப்பந்தப் பட்டியல் விவரம்:

கிரேட் ஏ (ஆண்டுக்கு ரூ.7 கோடி):

சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

கிரேட் பி (ஆண்டுக்கு ரூ.5 கோடி):

ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்.

கிரேட் சி (ஆண்டுக்கு ரூ.1 கோடி):

அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, நித்திஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெயிக்வாட்.

Story first published: Monday, February 9, 2026, 21:06 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+