For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க ரெண்டுபேரும் சூப்பருங்க... ஒருத்தரோட ஆட்டத்த மத்தவங்க மதிக்கிறாங்க.. ஜடேஜா பாராட்டு

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடினர்.

இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்களை குவித்து அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவர் ஆட்டத்தை மற்றவர் மதித்ததாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

விராட் -ரோகித் பார்ட்னர்ஷிப்

விராட் -ரோகித் பார்ட்னர்ஷிப்

இநதியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5வது போட்டியில் துவக்க வீரர் ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி களமிறங்கி விளையாடினார். இந்த ஜோடி இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்தது.

80 ரன்களை அடித்த விராட்

80 ரன்களை அடித்த விராட்

இந்த போட்டியில் ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் இணைந்து அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்பில் கோலி 80 ரன்களை குவித்தார். இந்த ரன் குவிப்பு இந்தியா 224 ரன்களை அடித்து சிறப்பாக இன்னிங்சை முடிக்க அடித்தளமாக அமைந்தது.

அஜய் ஜடேஜா பாராட்டு

அஜய் ஜடேஜா பாராட்டு

இந்நிலையில் துவக்க வீரர்களாக விளையாடிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருவரின் ஆட்டத்தை மற்றவர் மதித்து விளையாடியதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்பஸ்ஸிற்காக பேசிய ஜடேஜா, அவர்கள் இருவரும் இணைந்து ஆடியது நம்பமுடியாத வகையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சூழலை புரிந்து ஆட்டம்

சூழலை புரிந்து ஆட்டம்

அவர்கள் இருவரும் மூத்த வீரர்களாக உள்ளநிலையில் ரன்களை மட்டுமே குவிப்பதை நோக்கமாக கொண்டு விளையாடாமல் போட்டியின் சூழலையும் புரிந்து விளையாடியதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். தங்களுடைய பார்னர்களின் தேவையை அறிந்தும் இருவரும் விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, March 22, 2021, 19:18 [IST]
Other articles published on Mar 22, 2021
English summary
Since both are senior players and it not only means scoring runs but also understanding the match’s situation -Jadeja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+