
2ம் இடம் பிடிக்குமா?
அமீரகத்தில் வரிசையாக வெற்றிப் பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமாக தோல்வி அடைந்திருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 189 ரன்கள் அடித்தும், 2 ஓவர்கள் மீதம் வைத்து எதிரணி வெல்ல படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே. பிறகு, டெல்லியுடன் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதனால், 13 போட்டிகளில் விளையாடிய சென்னை நான்காவது தோல்வியை சந்திக்க, புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்துக்கு சறுக்கியது. டெல்லி முதலிடத்துக்கு முன்னேற, இப்போது ஆர்சிபி 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் புள்ளிகள் 18. எனினும், கைவசம் ஒரேயொரு போட்டி மட்டுமே சிஎஸ்கேவுக்கு மீதமுள்ளது. பெங்களூருவுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது. குறிப்பாக, இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் வென்று, கடைசியாக டெல்லியுடன் மோதும் போட்டியிலும் வென்றால், 20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப்புடன் சிஎஸ்கே தோற்றால், நிச்சயம் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துவிடும்.

சறுக்கல்
ஐபிஎல்-லை பொறுத்தவரை பிளே ஆஃப் விதிமுறைகள் தெளிவாக அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி, 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் மோதிய போட்டியில் வெற்றிப் பெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிப் பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஸோ, முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பது என்பது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான விஷயமாகும். அதேசமயம், முதல் அணியாக பிளே ஆஃப் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாம் இடம் பிடித்தால் நிச்சயம் அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
Recommended Video

கோலி பேசியது என்ன?
ரசிகர்கள் இந்த மட்டத்தில் தான் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது, பிளே ஆஃபில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தைப் பிடிக்கும் என்பதைத் தான் கணக்கிட்டு வருகின்றனர். ஆனால், ஆர்சிபி கேப்டன் கோலியோ இதிலிருந்து அப்பாற்பட்டு சென்றுவிட்டார். அதாவது, பிளே ஆஃபில் எத்தனையாவது இடத்தை பிடிக்கிறோம் என்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வலிமையான அணி ஒன்றை நிச்சயம் நாம் வீழ்த்தியாக வேண்டும் என்று அணி மீட்டிங்கில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பை தான் இலக்கு
கேப்டன் கோலி இதுகுறித்து டீம் மீட்டிங்கில் பேசியதாக வெளியான தகவலில், "நாம் பிளே ஆஃப் நுழைந்துவிட்டோம். ஆனால், நமது இலக்கு இதுவல்ல. கோப்பை தான். நாம் தோற்றது போதும். ரசிகர்களை ஏமாற்றியது போதும். இந்த முறை நமது கைகளில் இருந்து கோப்பை மிஸ்ஸாகக் கூடாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் மைனஸ் என்னவென்று இப்போது அனைத்து அணிகளுக்கும் தெரிந்துவிட்டது. அவர்களது முதல் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை 10 ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டாலே அவர்களை 150 ரன்களுக்குள் சுருட்டி விடலாம். நமது போட்டியாளர் சென்னை கிடையாது. பலம் வாய்ந்த மும்பை தான்.

நாம தான் ஜெயிக்கணும்
மும்பை இந்தியன்ஸ் அணி இத்தொடரில் பல போட்டிகளில் தோற்றதற்காக அவர்களை சாதாரணமாக எடைபோட்டு விட வேண்டாம். அவர்கள் தான் உண்மையில் ஆபத்தானவர்கள். நிச்சயம் அவர்களால் இறுதிப் போட்டிக்கு வர முடியும். நாமும் இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதி. அப்படி அவர்களை சந்திக்கும் பட்சத்தில், வெற்றி நம்முடையதாக இருக்க வேண்டும். பிளே ஆஃபில் எந்த போட்டியில் அவர்களை சந்திக்க நேர்ந்தாலும், அங்கு நாம் தான் வெற்றியாளராக இருக்க வேண்டும்" என்று விராட் கோலி பேசியிருப்பதாக தெரிகிறது.

பட்டைத் தீட்டும் கோலி
இந்த புகைச்சலுக்கு காரணம், சமீப காலமாக கோலியைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதாவது, முக்கிய ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாததால், கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவ்வப்போது ஆங்காங்கே கோரிக்கைகள் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்தும் இந்த சீசனோடு விலகுவதாக அறிவித்திருந்தார். கோலிக்கு பிறகு, டி20 அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தான் கேப்டன் பதவியில் இருந்து விலக கோச் ரவி சாஸ்திரி மூலம் அழுத்தம் கொடுத்தது ரோஹித் ஷர்மா தான் என்று கோலி உறுதியாக நம்புகிறாராம். அதன் வெளிப்பாடே, கேப்டனாக ஆர்சிபி அணியில் கடைசி தொடரில் பயணிக்கும் கோலி, மும்பை இறுதிப் போட்டி வரை வந்தாலும், அவர்களை எதிர்கொள்ள இப்போதே வீரர்களை பட்டைத் தீட்டி வருவதற்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தோர்.


Click it and Unblock the Notifications











