
கிரிக்கெட் தொடர்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மொத்தம் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் விளையாடும். மழை காரணமாக வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்
நேற்று தென்னாப்பிரிக்க நாடு முழுக்க புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டமாக கூடி கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ளூர் இசை குழுக்கள் அதிகமாக இருக்கின்றது. பேண்ட் குழுக்களுக்கு பெயர் பெற்ற இந்த நாட்டில் பல இடங்களில் இசை குழுக்கள் பாடல் பாடி கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.
கோஹ்லி தவான் நடனம்
நேற்று கேப் டவுனில் இருக்கும் ஒரு தெருவில் இது போன்று சாலையில் பாடுபவர்களை பார்த்துவிட்டு கோஹ்லியும் தவானும் நடனம் ஆடி இருக்கிறார்கள். இந்தியன் ஸ்டைல் நடனம் ஆடி அவர்கள் கொண்டாடினார்கள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிக்காமல் அவர்கள் ஜாலியாக நடனம் ஆடினார்கள்.

அடுத்த பிரபுதேவா
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. ஏற்கனவே கோஹ்லி பல முறை இதுபோல் நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் இதேபோல் இவர்கள் நடனம் ஆடினார்கள். அப்போது கோஹ்லி- அனுஷ்கா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications