Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையிலேயே நீ கிங் தான்யா! மாற்று திறனாளி ரசிகருக்காக விராட் கோலி செய்த காரியம் -வீடியோ

மும்பை : உலகில் அதிக ரசிகர்கள் உடைய கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலி செல்லும் இடத்தில் எல்லாம் அவருக்கு ரசிகர்களுக்கு கூடுவது என்பது புதிதல்ல. மதம், மொழி, நாடு,இளம் ஆகியவற்றை கடந்து உள்ள மக்களுக்கு விராட் கோலி ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கூட விராட் கோலிக்கு கூட தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் களத்தில் எப்போதுமே போர் வீரன் போல் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலிக்கு குழந்தை போல ஒரு மனதும் இருக்கிறது.

Virat kohli shows his golden gesture by spending time with fan

தாம் மகிழ்ச்சியான நேரத்தில் இருந்தால் காலத்தில் மற்ற வீரர்களை குஷிப்படுத்தும் வேலையிலும் விராட் கோலி ஈடுபடுவார். இந்த நிலையில் பாகிஸ்தான் உடனான முக்கிய ஆட்டத்திற்கு விராட் கோலி தயாராகி கொண்டு இருக்கிறார். காரணம் நாளை பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டம் ஒன்று இருக்கிறது. இதில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

கடந்த முறை டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதும் போது விராட் கோலி தன்னுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸை ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மோத இருக்கிறார்கள். இதனிடையே விராட் கோலியின் இன்னொரு முகத்தை காட்டும் வகையில் வீடியோ. தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலி பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒருவர் காத்திருந்தார்.
மாற்றுத்திறனாளி ஆன அந்த ரசிகரால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது. தலை கால் என ஒவ்வொரு உறுப்பும் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் விராட் கோலி அங்கு வந்து கொண்டிருந்தபோது நிர்வாகி ஒருவர் உங்களை பார்க்க ரசிகர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னவுடன் விராட் கோலி நேரடியாக அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை பார்த்து கை கொடுத்தார்.

மேலும் அந்த ரசிகர் உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை விளக்கினார். அதில் விராட் கோலி தொடர்ந்து புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Friday, September 1, 2023, 19:02 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+