Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி தான் டா பேசுவேன்.. மீண்டும் கம்பீரை வம்பிழுத்த விராட் கோலி.. ஆர்சிபி வெளியிட்ட வீடியோ

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று கம்பீரும் விராட் கோலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வரை டிரெண்டிங்கில் இருக்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆர் சி பி ஐ வீழ்த்தியதற்காக லக்னோ அணி வீரர்கள் கத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒவ்வொரு முறையும் லக்னோ வீரர்கள் ஆட்டம் இழக்கும் போது விராட் கோலி களத்திலே திருப்பி கொடுத்தார் .

Virat kohli slams Gautam gambhir on his activities after the rcb vs lsg match

இதுதான் தற்போது பிரச்சனைக்கு வழிவகுத்து இருக்கிறது. போட்டி முடிந்ததும் விராட் கோலியும் கம்பீரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தற்போது அவர்களுக்கு 100 சதவீதம் வரை போட்டியிலிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் rcb அணி வெளியிட்டுள்ள வீடியோ எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளது.

லக்னோ வீரர்கள் பெங்களூருவில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் தான் திருப்பி இவ்வாறு செய்ததாக விராட் கோலி மறைமுகமாக கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷல் ஆனது. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து வெளியூர்களில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட இருக்கிறோம்.

Virat kohli slams Gautam gambhir on his activities after the rcb vs lsg match

அதில் லக்னோவை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் 126 ரன்களை தான் அடித்தோம். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது நிச்சயம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெற முடியும் என்று நான் நம்பினேன். எங்கள் அணி வீரர்களையும் உற்சாகப்படுத்தினேன். களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை பெற்றது உற்சாகத்தை அளிக்கிறது.

லக்னோவில் எங்களுக்கு ரசிகர்கள் கூடியது மிகவும் பிரமிப்பாக இருந்தது. நாங்கள் நன்றாக விளையாடுவதால் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். தொடர்ந்து இதேபோன்று ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று கூறியுள்ள விராட் கோலி தங்கள் அணி வீரர்களிடையே பேசும்போது நீங்கள் ஒன்று கொடுக்க நினைக்கிறீர்கள் என்றால் அதை திருப்பிப் பெற்றுக் கொள்ள தயாராக இருங்கள். இல்லையெனில் அதை செய்யாதீர்கள் என கம்பீரை மறைமுகமாக சாடி உள்ளார்.

Story first published: Tuesday, May 2, 2023, 13:15 [IST]
Other articles published on May 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+