ஐ.சி.சி தரவரிசையில் 9 வது இடத்திற்கு சறுக்கிய கேப்டன் டோணி
டெல்லி: ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் டோணி ஒரு இடம் சரிந்து 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு நாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸ் நீடிக்கிறார். 2வது இடத்தில் இந்தியாவின் விராத் கோஹ்லி நீடிக்கிறார்.
கேப்டன் டோணி, 8வது இடத்திலிருந்து 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் புவனேஸ்வர்குமார் 7 ஆவது இடத்தில் இருந்து 8 ஆவது இடத்துக்கு பின் தங்கினார். ரவீந்திர ஜடேஜா 9 ஆவது இடத்தில் இருக்கிறார்.
அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 3, 2014, 14:47 [IST]
Other articles published on Dec 3, 2014


Click it and Unblock the Notifications