Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Breaking - விராட் கோலிக்கு காயம் ? ஒருநாள் தொடரிலிருந்து விலக வாய்ப்பு.. உண்மையா ? இல்லை நீக்கமா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs ENG 1st ODI: Virat Kohli விலகல்?

விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்த நிலையில், ரோகித் சர்மா அவருக்கு ஆதரவு வழங்குவது போல் பேசினார்.

இந்த நிலையில், விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடுப்பில் காயம்

இடுப்பில் காயம்

மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இது குறித்த தகவல் தெரிய வரும்.

பயிற்சிக்கு வரவில்லை

பயிற்சிக்கு வரவில்லை

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வீரர்கள் விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என்ற விலக்கு வழங்கப்பட்டது. விராட் கோலி ஃபார்மில் இல்லாததால், அவர் கண்டிப்பாக இந்தப் பயிற்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இதற்கு அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றன.

ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு

ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பு

ஒரு வேலை விராட் கோலி போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதனிடையே, விராட் கோலிக்கு உண்மையில் காயம் தானா இல்லை, நம்பியார் காலத்து டெக்னிக்கான ஃபார்மில் இல்லாத வீரரை காயம் என்று அனுப்பி விடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

டெஸ்ட் போட்டியை பார்த்து, டி20 போட்டிக்கு முடிவு எடுப்பதும், டி20 போட்டியை பார்த்து ஒருநாள் போட்டிக்கு முடிவு எடுப்பதும், மிகப் பெரிய தவறு. விராட் கோலி கடைசியாக விளையாடிய 11 சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 முறை அரைசதம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 11, 2022, 21:13 [IST]
Other articles published on Jul 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+