Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்!

Recommended Video

virat kohli may take a break| எனக்கு ஒய்வு வேணும்... கோலி எடுத்த திடீர் முடிவு

மும்பை : இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தியா அடுத்து ஆட உள்ள டி20 தொடரில் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார் விராட் கோலி. அதனால், அவர் விடுப்பு எடுத்துக் கொள்ள இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.

விராட் கோலி ஓய்வு பெற்றால், யார் அந்த தொடருக்கு கேப்டனாக செயல்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜனவரி மாதம் ஓய்வு

ஜனவரி மாதம் ஓய்வு

விராட் கோலி கடைசியாக ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து ஆடும் கோலி

தொடர்ந்து ஆடும் கோலி

அதன் பின் எந்த தொடரையும் விடாமல் ஆடி வந்தார் விராட் கோலி. இந்திய அணி இந்த ஆண்டு துவக்கம் முதல் இடைவிடாமல் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்ததால், கோலி அனைத்திலும் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபிஎல், உலகக்கோப்பை

ஐபிஎல், உலகக்கோப்பை

நியூசிலாந்து தொடரின் ஓய்வுக்குப் பின் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர், ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அதை தொடர்ந்து நீண்ட உலகக்கோப்பை தொடரிலும் ஓய்வின்றி ஆடினார்.

வெ.இண்டீஸ் தொடரில்..

வெ.இண்டீஸ் தொடரில்..

உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றே முதலில் கூறப்பட்டது. எனினும், இந்திய வீரர்கள் உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியால் துவண்டு போய் இருப்பதால், தான் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார் கோலி.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த மிகச் சிறிய இடைவெளியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. மூன்று டி20 போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரிலும் கோலி ஆடி வருகிறார்.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

இந்த நீண்ட நெடிய தொடர்களால் சோர்ந்து இருக்கும் கோலி தனக்கு ஓய்வு அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். ஆனாலும், அவர் 15 - 18 நாட்கள் வரை மட்டுமே ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்.

வங்கதேச டி20 தொடர்

வங்கதேச டி20 தொடர்

இந்தியா அடுத்து ஆட உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலி ஓய்வு எடுக்க உள்ளார். இந்த தொடர் நவம்பர் 3 முதல் 10 வரை நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க தொடர் அக்டோபர் 23 அன்று நிறைவடைய உள்ளது.

வெளியான தகவல்

வெளியான தகவல்

இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்த தகவல் இதுதான். "கோலி டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள இருக்கிறார். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கும் வீரர்களின் வேலைப் பளுவை கண்காணித்து, வீரர்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பதை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது"

யார் கேப்டன்?

யார் கேப்டன்?

கோலி ஓய்வு எடுக்க உள்ள நிலையில், ரோஹித் சர்மா தான் டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரில் ஆடுவார்

டெஸ்ட் தொடரில் ஆடுவார்

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே ஓய்வு பெறும் கோலி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நிச்சயம் ஆடுவார். இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வருவதால் அதன் முக்கியத்துவம் கருதி கோலி ஆடுவார் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Saturday, October 19, 2019, 18:46 [IST]
Other articles published on Oct 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+