இவரு தான் மேட்ச் ஜெயிக்க காரணம்..! குத்தி காட்டும் கோலி..! போட்டோ ரிலிஸ் செய்து சர்ச்சை..?
போர்ட் ஆப் ஸ்பெயின்: டாப் வின் அன்ட் டாப் பவுலர் என்று பதிவிட்டு புவனேஸ்வர் குமாருடன் இருக்கும் புகைப்படத்தினை கோலி டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். இது யாரையோ சொல்லிக் காட்டுவது போல் உள்ளது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்கள் ரோகித், தவான் இருவரும் சொதப்பினர். விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42வது சதத்தை பூர்த்தி செய்த கோலி 120 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது.

மாறிய வெற்றி இலக்கு
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீசில் லீவிஸ் 65 ரன்கள் சேர்த்தார். மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கு 270 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நாயகன் கோலி
இந்தியா சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

யார் வெற்றி?
நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மைதானத்தில் புவனேஸ்வர் குமார் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்தார். அதில் யாரால் இந்த வெற்றி கிடைத்தது, யார் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
டாப் வின் என கருத்து
அதில் கோலி குறிப்பிட்டதாவது : டாப் வின் அண்ட் டாப் பவுலர் பிரம் திஸ் கை என்று பதிவிட்டு புவனேஷ்வர் குமார் உடன் இருக்கும் புகைப்படத்தினை அவர் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமுக செய்தி?
எந்த தருணத்தில் எப்படி இருந்தாலும், டுவிட்டர் வழியாக அடுத்த சர்ச்சையை தொடங்கி இருக்கிறார் கோலி. ஏன் என்றால் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் ரோகித், தவான் சொதப்பல். ஆனால் கோலி சதம், ஸ்ரேயாஸ் அய்யர் சதம் என வெற்றி பெற்றது. தம்மை லேசாக மட்டம் தட்டி, அதே நேரத்தில் ரோகித்தை மறைமுகமாக குத்திக் காட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் அர்த்தம் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications