For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி vs ரோகித் சர்மா - ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? புள்ளி விவரம் இதோ

IPL 2024 : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் தற்போது இந்த தொடருக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் எப்படி விஜய், அஜித் என இருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்களோ? அதைப்போல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் தனிப்பட்டாளம் உள்ளது.

இந்த இரண்டு வீரர்களுக்கு உள்ள ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருவார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பட்டத்தை விராட் கோலியும், சிறந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மாவும் பெற்று இருக்கிறார்கள்.

Virat kohli vs Rohit sharma - Who is better batsman in IPL - Here is the stats

இந்த நிலையில் இந்த இரு ஜாம்பவான்களில் ஐபிஎல் தொடரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதை ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி பவுண்டரி விகிதம், எவ்வளவு டாட் பாலை குறைத்து விளையாடுகிறார் என்பதை குறித்து இருக்கும். அந்த வகையில் ரோகித் சர்மாவும் விராட் கோலி பவர் பிளேவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்கள்.

எனினும் ரன்கள் அடிக்கும் விகிதத்தில் விராட் கோலி சற்று அதிகமாக இருக்கிறார். பவர் பிளேவில் பவுண்டரி அடிக்கும் விகிதத்தில் ரோகித் சர்மா 18 புள்ளி 38 சதவீதமும், விராட் கோலி 17.5 சதவீதமும் உள்ளனர். எனினும் டாட் பால் குறைவாக இருப்பதில் விராட் கோலி 44 சதவீதம் இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மா 50 சதவீதம் டாட் பாலை சந்திக்கிறார்.
இதை வைத்துப் பார்க்கும்போது விராட் கோலி இதில் முன்னிலை இருக்கிறார்.

Virat kohli vs Rohit sharma - Who is better batsman in IPL - Here is the stats

இதே போன்று விராட் கோலி, ரோகித் சர்மாவும் ஐபிஎல் தொடரில் நடு வரிசை ஓவர்களில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இதில் ஸ்டிரைக் ரேட்டை பொருத்தவரை கோலி 126 என்று அளவிலும், ரோகித் சர்மா 122 என்ற அளவிலும் இருக்கிறார். ரன் சராசரியில் 23.26 என்ற கணக்கில் விராட் கோலியும், 19.39 என்ற சதவீதத்தில் ரோகித் சர்மாவும் இருக்கிறார்.

பவுண்டரி விகிதத்தில் விராட் கோலியை விட ரோகித் சர்மா முன்னிலை பெற்றிருந்தாலும், டாட் பால் விகிதத்தில் விராட் கோலி குறைவான அளவில் இருக்கிறார். இதனால் இதிலும் ரோகித் சர்மாவை விட விராட் கோலி முன்னிலையில் இருக்கிறார். இதே போன்று கடைசி கட்ட ஓவரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை ஒப்பிட்டு பார்த்தால் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் 204 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 195 என்ற அளவில் தான் இருக்கிறது.

Virat kohli vs Rohit sharma - Who is better batsman in IPL - Here is the stats

இந்த கட்டத்தில் பவுண்டரிகள் விகிதத்தில் இருவருமே சரிசமமாகவும் இருக்கிறார்கள். இதிலும் விராட் கோலி தான் குறைவாக டாட் பால் பிடித்து இருக்கிறார். இந்தப் பகுதியிலும் பார்க்கும் போதும் ரோகித் சர்மாவை விட விராட் கோலி நன்றாக விளையாடியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்கிறது.

எனினும் ரன்கள் அடிக்கும் விகிதத்தில் ரோகித்தை விராட் முந்தி இருக்கிறார். இதேபோன்று பவுண்டரிகள் அடிக்கும் விகிதத்தில் ரோகித் சர்மா 20.32 சதவீதமும், விராட் கோலி 18 புள்ளி 9 சதவீதமும் இருக்கிறார்கள். விராட் கோலி குறைவாக பந்துகளை வீணடித்திருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்கள் என்று அளவில் பார்க்கும்போது ரோகித் சர்மாவை விட விராட் கோலி அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

ரன்கள் அடிக்கும் விகிதத்திலும் முந்தியுள்ள விராட் கோலி பவுண்டரி விகிதத்திலும் ரோஹித் ஷர்மாவுடன் சரிசமமான நிலையில் இருக்கிறார். இந்த ஐந்து விஷயங்களையும் வைத்துப் பார்த்தால் ரோகித் சர்மாவை விட விராட் கோலியே நன்கு செயல்பட்டு இருக்கிறார். கடந்த ஐந்து சீசன்களாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட 400 ரன்கள் தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 5, 2024, 16:20 [IST]
Other articles published on Mar 5, 2024
English summary
Virat kohli vs Rohit sharma - Who is better batsman in IPL - Here is the stats விராட் கோலி vs ரோகத் சர்மா - ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மன்கள் யார்? புள்ளி விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+