அத்தனை ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்குவார் கோஹ்லி... கபில் தேவ்
கோலாலம்பூர்: இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவுக்கு பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் விராத் கோஹ்லி. இதுவரை நிகழ்த்தப்பட்ட அத்தனை சாதனைகளையும் அவர் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
ஏன், சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகளையும் கூட விராத் கோஹ்லி முறியடிப்பார் என்றும் கபில் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கும் வகையில் கோஹ்லியின் நேர்த்தியான ஆட்டத்திறன் உள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் கபில் தேவ்.
ஆனால் காயம் இல்லாமல் தொடர்ந்து ஆடும்படி கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கோஹ்லிக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

சந்தேகமே இல்லை...
இதுகுறித்து கோலாலம்பூரில் கபில் தேவ் கூறுகையில் சந்தேகமே இல்லை. கோஹ்லி நிச்சயம் புதிய சாதனைகளைக் குவிப்பார். அவரை யாருடனும் நான் ஒப்பிடவில்லை.
இன்னொரு பிராட்மேன் கிடையாது.. இன்னொரு சச்சின் கிடையாது
எப்படி இன்னொரு பிராட்மேன் வர முடியாதோ, 2வது சச்சின் வர முடியாதோ அதேபோலத்தான் கோஹ்லியும். அவர் தனித்துவம் மிக்கவர்.

இன்னொரு பிராட்மேன் கிடையாது.. இன்னொரு சச்சின் கிடையாது
எப்படி இன்னொரு பிராட்மேன் வர முடியாதோ, 2வது சச்சின் வர முடியாதோ அதேபோலத்தான் கோஹ்லியும். அவர் தனித்துவம் மிக்கவர்.

அபார திறன்
கோஹ்லியிடம் அபாரமான ஆட்டத்திறன் உள்ளது. 24 வயதில் இப்படி திறமையுடன் இருப்பது அரிய விஷயம்.

சச்சினை விட திறமையானவர்
வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் சச்சினை விட திறமையானவர் கோஹ்லி. அடுத்த தலைமுறை வீரர்களில் கோஹ்லிக்கே முதலிடம் கொடுப்பேன்.

34 வயது வரை விளையாடலாம்
கோஹ்லியின் ஆட்டத்திறனைப் பார்த்தால், 3 2முதல் 34 வயது வரை இதே பாணியில் சிறப்பாக விளையாட முடியும். காயமின்றி விளையாடனால் அவர் பழைய சாதனைகளை முறியடித்து, பல புதிய சாதனைகளையும் படைக்க முடியும்.

வருடம் முக்கியமல்ல
பிராட்மேன் 100 வருடம் விளையாட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அதேபோலத்தான் சச்சினும். அதேபோலத்தான் கோஹ்லியும். ஆனால் 24 வயதில் இப்படி ஆடுகிறவர், இதே வேகத்தில் தொடர்ந்து ஆடினால் நிச்சயம் வரலாறு படைக்க முடியும் என்பதில் ஐயமில்லை என்றார் கபில் தேவ்.


Click it and Unblock the Notifications