For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடிச்சிட்டு வெளியே போங்க.. அணிக்குள் ஈகோ இருக்கவே கூடாது.. பஞ்சாப் அணிக்கு சேவாக் அறிவுரை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிட்டயர்ட் அவுட் என்ற வார்த்தை தற்போது பிரபலமாகி வருகிறது. முன்பெல்லாம் பேட்ஸ்மேன் காயம் அடைந்தால் களத்தை விட்டு வெளியேறுவார்கள். ஆனால் தற்போது ரன்கள் அடிக்க முடியவில்லை என்றால் தமக்கு பதிலாக வேறு பேட்ஸ்மேன்கள் வரச் சொல்லிவிட்டு அவர்கள் வெளியேறி விடுகிறார்கள்.

இதற்கு ரிட்டயர்ட் அவுட் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு அஸ்வின் இந்த காரியத்தை செய்தார் . அதன் பிறகு நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் அதர்வா இவ்வாறு வெளியேறினார். ஆனால் இது தவறான முடிவு என்று கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

Virender sehwag asks Punjab players to sacrifice Ego for team

இது குறித்து பேசிய அவர் நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அதர்வாவை முன்கூட்டியே ரிட்டயர்ட் ஆகி வரச் சொல்லி இருப்பேன். அவர் 42 பந்தில் 70 ரன்கள் அடித்திருந்தால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும். நான் கேப்டனாக இருந்திருந்தால் காயம் அடைந்து விட்டதாக கூறி களத்தை விட்டு வெளியேற கூறியிருப்பேன்.

ரிட்டயர்டு அவுட் ஆவதை விட ரிட்டயர்ட் ஆவது தான் மேல். லக்னோ அணி கேப்டன் குருனல் பாண்டியா அப்படித்தான் நேற்று முன் தினம் செய்தார். நீங்கள் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி இருந்தால் நீங்கள் பிறகு களத்தில் வந்து பேட்டிங் செய்யலாம். ஆனால் நீங்கள் ரிட்டயர்ட் அவுட் ஆனால் அப்படி வந்து உங்களால் விளையாட முடியாது. நேற்றைய ஆட்டத்தில் அதர்வா 42 பந்துகளில் ரிட்டயர்ட் ஆவதற்கு பதில் 36 பந்துகளில் ஆகிருக்கலாம். ஏனென்றால் வேற ஏதேனும் பேட்ஸ்மேன் அவர் வீணடித்த ஆறு பந்துகளில் 15 ரன் அடித்து இருப்பார்கள்.

Virender sehwag asks Punjab players to sacrifice Ego for team

பஞ்சாப் அணி தவறான கணக்கை போட்டு விட்டது. அனைத்து பேட்ஸ்மேன்களும் குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்து இருக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் உங்களால் அதனை செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் களத்தை விட்டு ரிட்டயர்ட் ஆகி வந்திருக்க வேண்டும். இதில் நீங்கள் ஈகோ பார்க்க கூடாது. உங்கள் திறமையை நிரூபிக்க வேறு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அணியின் வெற்றிக்காக உங்கள் ஈகோவை தியாகம் செய்ய வேண்டும் என ஷேவாக் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 18, 2023, 19:46 [IST]
Other articles published on May 18, 2023
English summary
Virender sehwag asks Punjab players to sacrifice Ego for team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+