கெயில்... கிரிக்கெட்டின் பிரபஞ்ச நாயகன்.... பாராட்டி மகிழ்ந்த நம்ம ஊரு அதிரடி நாயகன் சேவாக்
டெல்லி:இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிக்சர் மன்னன் கெயில் அதிரடியாக ரன்குவித்ததை இந்தியாவின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாராட்டி உள்ளார்.
செயிண்ட் லூசியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் இனி வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அந்த அணியின் துவக்க வீரர் கெயிலின் அபார ஆட்டம் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தது. 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். 27 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அதில் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
அவரது ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதோடு, பாராட்டுகளை அள்ளி வருகிறது. கெயிலின் ஆட்டத்தை நமது முன்னாள் அதிரடி நாயகன் விரேந்திர சேவாக் பாராட்டி தள்ளிவிட்டார்.
இது குறித்து வாழ்த்துகளை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
27 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய வீரர். பிரபஞ்ச நாயகனாக இருப்பதற்கு காரணம் இதுதான். என்னவொரு எண்டர்டெய்னர் என்று பாராட்டி தள்ளிவிட்டார்.


Click it and Unblock the Notifications