Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மீண்டும் சதமடித்து அசத்திய சேவாக்!

லஹ்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் வீரேந்திர சேவாக் அதிரடி சதமடித்தார். ரஞ்சி கோப்பை போட்டியில் சேவாக் அடித்த 2வது சதம்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடந்த வாரம் 105 ரன்களை சேவாக் அடித்திருந்தார். ஹரியானா அணியுடனான இன்றைய தொடக்க நாள் ஆட்டத்தில் டெல்லி அணி 18.3ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

Virender Sehwag hits 2nd consecutive century in Ranji Trophy

அப்போது களத்துக்கு வந்த சேவாக் அதிரடியாக 129 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்களைக் குவித்தார். அவருடன் ரஜத் பாட்டியாவும் இணைந்து கை கொடுத்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேவாக் இடம்பெறாத நிலையில் ரஞ்சி கோப்பையில் அதிரடியாக அடுத்தடுத்து சதமடித்து அசத்தியுள்ளார்.

இதேபோல் உலகக் கோப்பையில் இடம்பெறாத யுவராஜ்சிங்கும் கூட ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அடுத்தடுத்து 3 சதங்களைக் குவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 5, 2015, 17:40 [IST]
Other articles published on Jan 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+