For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஒரு பால்.. வெற்றிபெற 5 ரன் தேவை.. இளம் வீரர் செய்த "அசால்ட்டு" சம்பவம்.. வைரல் வீடியோ!

டெல்லி: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று பரோடா அணியை சேர்ந்த இளம் வீரர் விஷ்ணு சோலங்கி செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது .

ஏற்கனவே பல்வேறு தரப்பு போட்டிகள் குழுக்களுக்கு உள்ளே நடந்துவிட்டது.மொத்தம் 38 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடக்கிறது.

காலிறுதி

காலிறுதி

தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் முக்கியமான அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஹரியானா பரோடா அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. கடைசி பந்து வரை இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

எப்படி

எப்படி

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹரியானா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது. ராணா அதிரடியாக ஆடி 49 ரன்களை எடுத்தார். இந்த வலுவான இலக்கை நோக்கி பரோடா அணி களமிறங்கியது .

பரோடா

பரோடா

ஆனால் பரோடா அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். கேதார் ஜாதவ் மட்டும் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய விஷ்ணு சோலங்கி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். இந்த நிலையில் கடைசி மூன்று பந்தில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

பரபரப்பு

பரபரப்பு

இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்றது. ஹரியானா அணியின் முக்கியமான பவுலர் சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். 4வது பந்தை சிக்ஸ் பறக்கவிட்ட சோலங்கி அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

வெற்றி

அதிலும் கடைசி பந்தில் சுமித் வீசிய யார்க்கர் பந்தை தோனி ஸ்டைலில் சோலங்கி ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸ் அடித்தார். இதனால் பரோடா அணி 150 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 46 பந்துகள் பிடித்த சோலங்கி 5 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 71 ரன்கள் எடுத்தார்.

 செமி பைனல்

செமி பைனல்

இவர் கடைசி மூன்று பாலில் போட்டியை மாற்றியது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. இவரின் சிக்ஸ் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பரோடா அணி இதனால் தற்போது செமி பைனலுக்கும் தேர்வாகி உள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 12:11 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Vishnu Solanki brings up a Dhoni with a helicopter shot to finish the match for Baroda in Syed Mushtag Ali Cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+