Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொல்லித்தந்த டெக்னிக்.. கடைசி ஓவர் திக்திக்..கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்

சிட்னி: சையது முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக ஆடி வைரலாகி வரும் விஷ்ணு சோலங்கி தன்னுடைய ஆட்டத்திற்கு தோனிதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று பரோடா அணியை சேர்ந்த இளம் வீரர் விஷ்ணு சோலங்கி செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஹரியானா பரோடா அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய ஹரியானா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது.

பரபரப்பு

பரபரப்பு

அதன்பின் களமிறங்கிய பரோடா அணியில் விஷ்ணு சோலங்கி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். இந்த நிலையில் கடைசி மூன்று பந்தில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கடைசி மூன்று பந்தில் விஷ்ணு 6, 4 , 6 என்று அடித்து அசத்தினார். அதிலும் கடைசி பந்தில் சுமித் வீசிய யார்க்கர் பந்தை தோனி ஸ்டைலில் சோலங்கி ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸ் அடித்தார்.

 வைரல்

வைரல்

இதனால் பரோடா அணி 150 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 46 பந்துகள் பிடித்த சோலங்கி 5 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 71 ரன்கள் எடுத்தார். இதனால் விஷ்ணு சோலங்கி இணையம் முழுக்க வைரலாகி வருகிறார். இவரின் ஆட்டம் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இந்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றியது குறித்து சோலங்கி பேட்டி அளித்துள்ளார். அதில், நான் இப்படி அதிரடியாக ஆடுவதற்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். அதிலும் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ஷாட்டை பயிற்சி செய்தேன்.

சையது முஷ்டாக் கோப்பை

சையது முஷ்டாக் கோப்பை

சையது முஷ்டாக் தொடரை மனதில் வைத்துதான் இந்த பயிற்சியை மேற்கொண்டேன். முக்கியமாக டெத் ஓவர்களில் ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். டெத் ஓவர்களில் தோனி எப்படி ஆடுவார் என்பதை கவனமாக பார்த்தேன். அவரை பின்பற்றினேன்.

தோனி காரணம்

தோனி காரணம்

அவர் ஆட்டத்தை பின் தொடர்ந்து அதில் கொஞ்சம் மாற்றங்களை செய்தேன். கடைசி ஓவர்களில் அதிகமாக யார்க்கர் போடப்படும். இதனால் அதை பயன்படுத்திக் கொண்டு சிக்ஸ் அடிக்க முடிவு செய்தேன், என்று விஷ்ணு சோலங்கி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 28, 2021, 12:13 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+