Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. அட்டாக் செய்த ரோஹித்.. அரை மணி நேரம் வியப்பின் உச்சிக்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்

மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஆடிய ஒரு இன்னிங்ஸை பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் அரை மணி நேரத்திற்கு வியப்பின் உச்சியில் இருந்ததாக பத்திரிக்கையாளர் விமல் குமார் கூறி இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது.

அதில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. விவியன் ரிச்சர்ட்ஸின் சொந்த ஊரான ஆன்ட்டிகுவாவில் உள்ள செயின்ட் லூசியாவில் அந்தப் போட்டி நடைபெற்றது. விவியன் ரிச்சர்ட்ஸ் அந்தப் போட்டியை நேரில் காண வந்திருந்தார். அவர் விராட் கோலி மீது பெரும் மதிப்பு வைத்து இருக்கிறார்.

t20 world cup india rohit sharma

அவரை தற்காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என எப்போதும் பாராட்டியும் வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த போட்டியில் குறிப்பாக விராட் கோலி ஆட்டத்தை பார்க்கவே அவர் வந்தார். ஆனால், அந்தப் போட்டியில் நடந்ததே வேறு. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ரோஹித் சர்மா வெறிகொண்டு ஒரு ஆட்டம் ஆடி இருந்தார்.

சமீப காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனும் இப்படி ஒரு பேட்டிங் செய்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு ஆடினார் ரோஹித் சர்மா. 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 7 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது.

அப்போது ரோஹித் சர்மா ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் அரை மணி நேரத்துக்கு வியப்பில் இருந்ததாக சிலர் தன்னிடம் கூறினார்கள் என்றார் விமல் குமார். அந்தப் போட்டியில் விராட் கோலி ஐந்து பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார். அது விவியன் ரிச்சர்ட்ஸ்-க்கு ஏமாற்றத்தை அளித்த போதும் அவர் ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்து இருக்கிறார்.

அந்த போட்டியில் அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது குறித்து விமல் குமார் பேசுகையில், "ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், வேறு எந்த அணியும் நம்மை நிறுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியா அணியை குறிவைத்து ஆடினார்." என்றார்.

மேலும், "அது விவியன் ரிச்சர்ட்ஸ்-இன் சொந்த ஊராகும். அவர் அந்த போட்டியை பார்க்கும் போது வியப்பின் உச்சத்தில் இருந்ததாக சிலர் என்னிடம் சொன்னார்கள். அரை மணி நேரத்துக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஒரு வீரரை நீங்கள் வியப்பில் வைத்திருந்ததால் உங்கள் வாழ்க்கையின் உச்சத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆட்டத்தை பார்க்கும் போது விவியன் ரிச்சர்ட்ஸ் கை தட்டுகிறார் என்றால் அது போன்ற சிறந்த விஷயம் வேறு எதுவுமே இருக்க முடியாது." என்று கூறினார் விமல் குமார்.

Story first published: Friday, August 30, 2024, 10:20 [IST]
Other articles published on Aug 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+