Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிச்சர்ட்ஸின் நினைவுச் சின்னம் சூறையாடப்பட்டது!

செயின்ட் ஜான்ஸ், ஆன்டிகுவா: கிரிக்கெட் உலக ஜாம்வான்களில் ஒருவரும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனுமான விவியன் ரிச்சர்ட்ஸின் நினைவுச் சின்னத்தை சில விஷமிகள் சூறையாடி விட்டனர்.

இதுகுறித்து ஆண்டிகுவா -பார்புடா கிரிக்கெட் சங்கத் தலைவர் சோரோல் பார்த்லே அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

Vivian Richards' monument vandalised

செயின்ட் ஜான்ஸில் ரிச்சர்ட்ஸ் வீடு உள்ள தெருவிலேயே இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. அதைத்தான் விஷமிகள் சூறையாடியுள்ளனர்.

இதுகுறித்து பார்த்லே கூறுகையில், இது தேசிய அவமானம், வருத்தத்திற்குறிய செயல். தேசியப் பெருமையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் செய்த செயல் இது. இதற்காக நான் அவமானப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தற்போது விஷமிகள் சேதம் விளைவித்ததால் இங்கு வைக்கப்பட்டிருந்த சிலை பழுது பார்க்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று போர்டு வைத்துள்ளனர்.

Story first published: Tuesday, November 5, 2013, 17:12 [IST]
Other articles published on Nov 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+