For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்கடா சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. பாக். பவுலரால் கடுப்பான கோச்.. வைரலாகும் வகாப் ரியாஸ் வீடியோ

By Veera Kumar

துபாய்: பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓடத்தெரியாமல் ஓடி, பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாகினார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடுவேயான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இலங்கை 482 ரன்களை குவித்து, 220 ரன்கள் முன்னிலை பெற்றது.

பந்து வீச வந்த வகாப் ரியாஸ்

பந்து வீச வந்த வகாப் ரியாஸ்

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியபோதுதான், அந்த கூத்து அரங்கேறியது. 111வது ஓவரை வீச அழைக்கப்பட்டார் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான வகாப் ரியாஸ். அப்போது கருணரத்னே, 165 ரன்களுடன் பந்தை எதிர்கொள்ள தயாராக நின்றார்.

வகாப் ரியாசை நம்பிய கேப்டன்

வகாப் ரியாசை நம்பிய கேப்டன்

விக்கெட்டை வீழ்த்தி, பாகிஸ்தானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்துவார் என்று நினைத்துதான், விக்கெட் கீப்பரும், கேப்டனுமான சர்ப்ராஸ் அகமது, வகாப் ரியாசை பந்து வீச அழைத்தார். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு.

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, தொடர்ந்து 5 முறை, பந்து வீச ஓடிவந்துவிட்டு பந்தை வீசாமலேயே நின்றுவிட்டார், வகாப் ரியாஸ். சில நேரங்களில் கையை சுழற்றும் அளவுக்கு வந்துவிட்டு பிறகு பந்தை வீசாமல் நின்றுவிடுவார். பேட்ஸ்மேன் ஒவ்வொருமுறையும் தயாராகுவதும், ரியாஸ் நின்றதும், திரும்ப பழைய பொசிசனுக்கு போவதுமாகவே இருந்தார்.

எழுந்து போன பாகிஸ்தான் பயிற்சியாளர்

எழுந்து போன பாகிஸ்தான் பயிற்சியாளர்

எரிச்சலோடு இதை பார்த்தபடியே இருந்தார் சர்ப்ராஸ் அகமது. ஆனால், கேலரியில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்தான், இதனால் மிகவும் கடுப்பானார். சில நேரங்களில் வாய்க்குள், எதையோ முனுமுனுத்ததையும் வீடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆர்த்தர், இருக்கையில் இருந்து எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

இத அப்பவே செய்திருக்கலாம்ல

இலங்கையின் 2வது இன்னிங்சில் வகாப் ரியாஸ் சிறப்பாக பந்து வீசி அச்சுறுத்தினார் என்றபோதிலும், இந்த சம்பவத்தின் வீடியோவை பார்த்தால் அவராலேயே சிரிக்காமல் இருக்க முடியாது. வகாப் அவ்வப்போது இப்படித்தான் ஓட்டத்தை மிஸ் செய்துவிடுவார் என்றபோதிலும், இம்முறை அது மாரத்தான் ஓட்டம்போல மாறியதுதான் கொடுமை.

Story first published: Monday, October 9, 2017, 14:46 [IST]
Other articles published on Oct 9, 2017
English summary
Pakistan fast bowler Wahab Riaz missed his run up on five consecutive attempts on day two of second Sri Lanka Test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+