Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கடவுளுடன் டின்னர்" சாப்பிட ஆசையா..?... ஜஸ்ட் ரூ. 1,47,000 மட்டுமே கட்டணம்!

மெல்போர்ன்: கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன், ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டின்னர் சாப்பிட ரூ. 1 லட்சத்தும் 47 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றுள்ளது. வரும் 22ம் தேதி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

Want a dinner with Sachin Tendulkar in Sydney? Be ready to pay 3000 Australian dollars

சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருடன், ஆஸ்திரேலியாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், டின்னர் சாப்பிட இந்திய மதிப்பில் ரூ. 73,500 முதல் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்ளால் போற்றப் படும் சச்சினுடன் டின்னர் சாப்பிடும் திட்டம் ஒன்றை ஆஸ்திரேலியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறிவித்துள்ளது. வரும் 26ம் தேதி நடைபெறும் இந்த டின்னரில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி மேலும் சில வி.ஐ.பி,க்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

60 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வி.ஐ.பி.டின்னரில் பங்கேற்க ரூ. 73,500 முதல் ரூ. 1,47,000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்பவர்களுக்கு சச்சின் கையெழுத்திட்ட அவரது சுயசரிதை புத்தகம் வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், சச்சினுடன் டின்னர் சாப்பிட பலர் ஆர்வமாக விண்ணப்பித்து வருவதாகவும், அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Story first published: Wednesday, February 18, 2015, 15:08 [IST]
Other articles published on Feb 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+