“அட இதுதான்பா வெற்றியை தீர்மானிக்கும்”.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. வக்கார் யூனிஸ் கூறிய டிப்ஸ்!
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இதனையடுத்து சூப்பர் 12 சுற்றின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23ம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டி மீது வழக்கமாகவே எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கும். அதிலும் கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இதற்கு பழிதீர்க்கும் முடிவுடன் இந்தியா களமிறங்குவதால் போட்டி இன்னும் சூடுபிடித்துள்ளது. இந்த போட்டியின் போது மழைக்கான வாய்ப்பும் குறைந்துள்ளதால், முழு ஓவர்களும் வீசப்படும் எனத்தெரிகிறது.

வக்கார் யூனிஸ்
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என பாக். முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். அதில், டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஓப்பனர்கள் தான் முக்கியம். எப்படிபட்ட களமாக இருந்தாலும், ஓப்பனிங் வீரர்கள் பவர் ப்ளேவில் 50 - 60 ரன்கள் குவித்தால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல இலக்கை நிர்ணயிக்க சுலபமாக இஉர்க்கும். இதுவே மற்றொருபுறம் பார்த்தால் பவர் ப்ளே வேகப்பந்துவீச்சாளர்களால் வெற்றி பெற வைக்க முடியும்.

பவுலர்கள் பணி
அதாவது பாகிஸ்தானில் உள்ள சாஹீன் அஃப்ரிடி நசீம் ஷா இருவரும் பவர் ப்ளேவில் பந்துவீசுவார்கள். இவர்களை அடித்து ஆடி இந்திய அணி ஸ்கோர் செய்தால் ஆதிக்கம் வரலாம். இல்லையென்றால் விக்கெட்களை எடுத்து பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தலாம். எனவே ஆட்டத்தின் முடிவுகள் என்னவென்பது பவர் ப்ளேவிலேயே தெரியவந்துவிடும்.

3வது இடம் முக்கியம்
இதே போல 3வதாக களமிறங்கும் வீரரும் மிக முக்கியமானவர். பவர் ப்ளேவில் முதல் 2 விக்கெட்கள் விழுந்துவிட்டால், கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு அவருடையது தான். அந்தவகையில் அனைத்து அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை அந்த இடத்தில் வைத்துள்ளது. இந்தியாவில் விராட் கோலி என்றால், பாகிஸ்தானில் ஃபகார் ஜமான் இருக்கிறார். இதே போல தான் மற்ற அணிகளிலும் உள்ளனர் என வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications