Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி கோலிதான்.. ஆனால் ரோஹித் செம கேப்டன்.. பத்த வைக்கும் வக்கார் யூனிஸ்

Recommended Video

கோலி கோலிதான்.. ஆனால் ரோஹித் செம கேப்டன்.. பத்த வைக்கும் வக்கார் யூனிஸ்- வீடியோ

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்கிய வக்கார் யூனிஸ் இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய கோப்பை செயல்பாடுகள் பற்றி பேசியுள்ளார்.

இந்திய அணி ஆசிய கோப்பையில் கொஞ்சம் தடுமாறி தான் வென்றது. பாகிஸ்தான் அணியோ எதிர்பார்த்ததற்கு மாறாக மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கு என நியமிக்கப்பட்ட தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் வக்கார் யூனிஸ்.

கோலி இல்லாத இந்தியா

கோலி இல்லாத இந்தியா

"விராட் கோலி, விராட் கோலி தான். அவருக்கு யாராலும் சவால் விடமுடியாது. ஆனால், அவர் இல்லாமல் கூட இந்திய அணி ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடியிருக்கிறது" என தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் வக்கார் யூனிஸ்.

ரோஹித் சிறந்த கேப்டன்

ரோஹித் சிறந்த கேப்டன்

"கோலி இல்லாத தொடரில், ரோஹித் சிறப்பாக செயல்பட்டார். மிக அமைதியாக இருந்தார். அவரது தலைமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டதையும் பார்த்து இருக்கிறேன். அவர், மற்ற வீரர்களை தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன்" என புகழ்ந்து தள்ளி உள்ளார் வக்கார் யூனிஸ்.

ஏழ்மை பின்னணியில் இருந்து…

ஏழ்மை பின்னணியில் இருந்து…

மேலும், "இந்தியாவிடம் உலக தரத்திலான துவக்க வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் எப்போதும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதிலும், வேகப்பந்துவீச்சாளர்கள். அவர்கள் ஏழை குடும்பங்களில் இருந்து வருகிறார்கள். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஐபிஎல் அங்கே பெரிய வித்தியாசத்தை கொடுத்துள்ளது" என ஒரே இந்திய புகழ்ச்சியாக பேசியுள்ளார் வக்கார் யூனிஸ்.

உள்குத்து இருக்குமோ?

உள்குத்து இருக்குமோ?

"வக்கார் யூனிஸ் அவ்வளவு எளிதில் இந்தியா பற்றி இப்படி புகழ்ந்து பேச மாட்டாரே" என்ற சந்தேகம் தான் நமக்கு எழுகிறது. "இவர் புகழ்ச்சியில் எதுவும் உள்குத்து இருக்குமோ" என ஒரு பக்கம் நினைத்தாலும், "அப்படி எல்லாம் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் இந்த பாகிஸ்தான்காரருக்கு இந்தியாவை புகழ்ந்து பேச ஒரு மனசு வேணுமே" என பாராட்டவும் தோன்றுகிறது.

Story first published: Wednesday, October 3, 2018, 18:00 [IST]
Other articles published on Oct 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+