பெங்களூரில் கொடி நாட்டும் தமிழக வீரர்கள்.. வாஷிங்டன் சுந்தரையும் வாங்கியது!
Recommended Video

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. தற்போது தமிழக வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் தமிழக வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே அந்த அணியால் முருகன் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏனோ சென்னை அணி இருவரையும் கேட்கவேயில்லை.

பவுலரானார்
வாஷிங்டன் சுந்தர் முதல்தர போட்டிகளில் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார். முதலில் பேட்ஸ்மேனாக இருந்த இவர் பின் பவுலாராக மாற்றப்பட்டார். இப்போது சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்கியுள்ளார்.

ஐபிஎல்
ஐபிஎல்லில் புனே அணிக்காக விளையாடியது இவருக்கு நிறைய அனுபவங்களை கொடுத்துள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடுத்த பவுலிங் முத்து வாஷிங்டன் சுந்தர். இவருக்கு 2016 ஐபிஎல் போட்டியில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.

பெங்களூர் அணி
இவரை பெங்களூர் அணி ஏலம் எடுத்து இருக்கிறது. 3.20 கோடி கொடுத்து வாஷிங்டன் சுந்தர் ஏலம் எடுக்கப்பட்டார். இவருக்கு மும்பை அணி அதிக முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும்
சென்னை அணி மீண்டும் தமிழக வீரரை எடுக்க மறுத்துள்ளது. மாறாக பெங்களூர் அணி தமிழக வீரர்கள் அனைவரையும் எடுத்து வருகிறது. இதற்கு முன் முருகன் அஸ்வினை 2.20 கோடி கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications