For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட்டை இழுத்து மூடுங்கள்.. ஐசிசிக்கு வாசிம் அக்ராம் கோரிக்கை.. எதிர்காலம் இது தான்?

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இழுத்து மூடுமாறு ஐசிசிக்கு பகிர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

KL Rahul கேப்டனாக Comeback கொடுக்க உள்ளார் *Cricket

பாகிஸ்தானுக்காக 356 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 502 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றதற்கு வாசிம் அக்ரம் முக்கிய காரணமாகும்.

கிரிக்கெட்டை காப்பாற்றிய ஒருநாள் போட்டி

கிரிக்கெட்டை காப்பாற்றிய ஒருநாள் போட்டி

ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் புதிய ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு நாள் போட்டிகளை வைத்து உலக கோப்பை தொடரும் நடத்தப்பட்டது.

டி20 கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்

முதலில் 60 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட், பிற்காலத்தில் 50 ஓவராக மாற்றப்பட்டது. தற்போது கிரிக்கெட்டின் புதிய பரிணாமமாக டி20 போட்டிகள் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் வந்ததிலிருந்து கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட தற்போது கிரிக்கெட் ரசிகர்களாக மாறிவிட்டனர். டெஸ்ட் போட்டிக்கும் இன்று வரை தனி ரசிகர் பட்டாளம் உள்ளன.

 ஆபத்தை நோக்கி கிரிக்கெட்

ஆபத்தை நோக்கி கிரிக்கெட்

சொல்லப் போனால் டி20 போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் தற்போது ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்த ஒரு நாள் போட்டி இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஐசிசி நல்லது செய்கிறேன் என்று சில விதிமுறைகளை மாற்றியது தான். ஒரு நாள் போட்டியில் ஒரு முனைக்கு ஒரு பந்து என மாற்றப்பட்டது .

ஓய்வு என்பதே இல்லை

ஓய்வு என்பதே இல்லை

மேலும் பீல்டிங் விதிமுறைகளும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் காரணமாக டி20 போட்டியின் பெரிய வடிவம் தான் ஒரு நாள் போட்டி என்று தற்போது மாறிவிட்டது. இது ரசிகர்களுடைய சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் ஐசிசி, டி20 ,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் என மூன்று போட்டிகளையும் நடத்துவதால் வீரர்களுக்கு ஓய்வு என்பதை இல்லாமல் போய்விட்டது.

வசிம் அக்ரம் கோரிக்கை

வசிம் அக்ரம் கோரிக்கை

இதனால் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் தனது 31 வது வயதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் வசிம் அக்ரம் ஒரு நாள் போட்டிகளை ஐசிசி ஒரே அடியாக நிறுத்தி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பெயருக்கு நடத்துகிறார்கள்

பெயருக்கு நடத்துகிறார்கள்

ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் நடந்தால் கூட்டம் வருவதாக குறிப்பிட்ட வசிம் அக்ரம், இதுவே இந்தியா ,பாகிஸ்தான் ,இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரு நாள் போட்டிகள் பார்க்க பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவதில்லை என்று தெரிவித்தார் .ஒருநாள் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்காக பெயருக்கு ஐசிசி நடத்துவதாக குற்றச்சாட்டிய வசிம் அக்ரம், ஒரு நாள் போட்டியில் 40 ஓவரில் 220 ரன்கள் அடிக்கப்பட்டு கடைசி 10 ஓவரின் 100 ரன்கள் அடித்து அது வெறும் ரன் தயாரிக்கும் அரிசி மில் போல் ஆகிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சலிப்பை தருகிறது

சலிப்பை தருகிறது

ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக, ஒரு நாள் போட்டி தமக்கு சலிப்பு ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட வசிம் அக்ரம், டி20 கிரிக்கெட் நான்கு மணி நேரத்தில் முடிந்து விடுவதாகவும் ,அதன் மூலம் நிறைய பணம் கிடைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் செத்து வருவதாகவும் அக்ரம் கவலை தெரிவித்துள்ளார். இதனால் ஒருநாள் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதால் மிகவும் சோர்வடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, July 21, 2022, 19:38 [IST]
Other articles published on Jul 21, 2022
English summary
Wasim akram asks icc to scrap the odi matchesஒருநாள் கிரிக்கெட்டை இழுத்து மூடுங்கள்.. ஐசிசிக்கு வாசிம் அக்ராம் கோரிக்கை.. எதிர்காலம் இது தான்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+