For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தில்.. தில் பாகிஸ்தான் பாட்டு போடனுமா? முதலில் நீங்க என்ன கிழிச்சிங்க? வசீம் அக்ரம் பாய்ச்சல்

பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி இரண்டில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோற்று இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு சாதகமான சூழல் மைதானத்தில் நிகழவில்லை என்றும் மைதானத்தில் பாகிஸ்தான் தில் தில் பாடல் ஒழிக்கப்படவில்லை என்றும் அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆத்தர் கூறினார்.

Wasim akram hit backs pakistan cricket team director for dil dil song remark

இந்த நிலையில் மிக்கி ஆத்தரின் இந்த பேச்சுக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தில் தில் பாடல் ஒலிக்கப்படவில்லை என்று சொல்வதெல்லாம் ஒரு காரணமா? இது பற்றி எல்லாம் நாங்கள் கேட்க விரும்பவில்லை. பாகிஸ்தான் அணி வெற்றி பெற நீங்கள் எந்த மாதிரியான யுக்திகளை அமைத்தீர்கள். பாகிஸ்தான் வீரர்களுக்கு நீங்கள் எந்த வகையில் உதவியாக இருக்கிறீர்கள்.

குல்தீப் போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள என்ன திட்டம் வகுத்து கொடுத்தீர்கள் அதுதான் முக்கியமே தவிர தில் தில் பாடல் போடவில்லை என்பதெல்லாம் ஒரு காரணமாக சொல்வது ஏமாற்றம் அளிக்கிறது. பாபர் அசாம் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் அணி தொடரை நன்றாக தொடங்கி தற்போது பாதையில் இருந்து தடுமாறி வருகிறது. இன்னும் சில தோல்வியை தழுவினால் அரை இறுதி வாய்ப்பு மிகவும் ஆபத்தாகிவிடும் என்று வசிம் அக்ரம் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதனிடையே தில் தில் பாடல் ஒலிபரப்பு படவில்லை என்று கூறியதற்கு ரசிகர்கள் தற்போது கிண்டல் அடித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி ஏதேனும் விக்கெட் எடுத்தால் ஆட்டத்தில் ஏதேனும் சாதனையை செய்தால் அந்தப் பாடலை ஒளிபரப்பு செய்யலாம். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக அப்படி ஒரு வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு ஏற்படவில்லையே ?பிறகு எப்படி அந்த பாடலை ஒளிபரப்பு செய்ய முடியும் என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Story first published: Friday, October 20, 2023, 23:04 [IST]
Other articles published on Oct 20, 2023
English summary
Wasim akram hit backs pakistan cricket team director for dil dil song remark தில்.. தில் பாகிஸ்தான் பாட்டு போடனுமா? முதலில் நீங்க என்ன கிழிச்சிங்க? வசீம் அக்ரம் பாய்ச்சல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+