Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தான் பலம், பலவீனம் என்ன ? முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம் கருத்து..புவிக்கு செம அட்வைஸ்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் சீனியர் வீரர் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மிகவும் சிரமப்படுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வசீம் அக்ரம் ஆருடம் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. பிரதான சுற்று 22ஆம் தேதி தொடங்குகிறது.

வரும் 23ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன.

புவனேஸ்வர் குமாரின் மைனஸ்

புவனேஸ்வர் குமாரின் மைனஸ்

இந்த நிலையில் இந்திய பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து வசிம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஸ்வர் குமார், புது பந்தை சிறப்பாக பயன்படுத்தக்கூடியவர். ஆனால் அவருக்கு வேகம் குறைவாக இருக்கிறது.

மிகவும் சிரமம்

மிகவும் சிரமம்

அவருடைய பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் நிச்சயம் அவர் ஆஸ்திரேலியா மைதானங்களில் மிகவும் சிரமப்படுவார். அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்வார். யாக்கரும் நன்றாக வீசுகிறார். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நீங்கள் ஜொலிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வேகம் மிகவும் முக்கியம்.

பாகிஸ்தானின் குறை

பாகிஸ்தானின் குறை

ஆஸ்திரேலிய ஆடுகளம் எப்படி செயல்படும் என்று எனக்கு நன்றாக தெரியும். இந்தியாவின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் பும்ரா இல்லாதது பெரிய மைனஸ் தான். இன்னும் பும்ராவுக்கு பதில் யார் விளையாட போகிறார் என்று தெரியவில்லை. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடுவரிசை மிகவும் சிரமப்படுகிறது.

உலக கோப்பை வாய்ப்பு

உலக கோப்பை வாய்ப்பு

பாகிஸ்தான் அணியின் நடுவரசை மட்டும் சிறப்பாக விளையாடினால் அந்த அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும். ஏனெனில் பாகிஸ்தான் பந்துவீச்சு மிக பலமான ஒன்றாக இருக்கிறது. மேலும் பாகிஸ்தான அணியின் தொடக்க வீரர்கள் உலகத்தில் சிறந்த ஜோடியாக விளங்குகிறார்கள்.நடுவரிசை மட்டும் ஓரளவுக்கு விளையாடினால் பாகிஸ்தானுக்கும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, October 13, 2022, 19:05 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+