Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுடன் தனது கடைசி டெஸ்ட்டை ஆட வேண்டும் சச்சின்- அக்ரம்

கராச்சி: தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் சச்சின் டெண்டுல்கர் ஆட வேண்டும். அதுவும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடன் மோதித்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் சச்சின் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தனது கடைசி டெஸ்ட் போட்டியையும் பாகிஸ்தானுடன் சச்சின் ஆட வேண்டும் என்று அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

200வது டெஸ்ட்டுக்கு ரெடியாகும் சச்சின்

200வது டெஸ்ட்டுக்கு ரெடியாகும் சச்சின்

இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியைச் சந்திக்க தயாராகி வருகிறார்.

மேற்கு இந்தியத் தீவுகளுடன்

மேற்கு இந்தியத் தீவுகளுடன்

மேற்குஇந்தியத் தீவுகள் அணி நவம்பரில் இந்தியா வருகிறது. அப்போது தனது 200வது டெஸ்ட் போட்டியை அந்த அணிக்கு எதிராக சந்திக்கவுள்ளார் சச்சின்.

மும்பையா.. கொல்கத்தாவா...

மும்பையா.. கொல்கத்தாவா...

இந்த போட்டி எங்கு நடத்தப்படும் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. மும்பை என்றும் கொல்கத்தா என்றும் பேச்சு அடிபடுகிறது. பெங்களூரும் போட்டியில் உள்ளது.

ஒரே வீரர் சச்சின்தான்

ஒரே வீரர் சச்சின்தான்

200வது டெஸ்ட் போட்டியில் சச்சின் ஆடி முடித்ததும், புதிய உலக சாதனை படைப்பார். அதாவது இதுவரை எந்த அணியின் வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. எனவே சச்சின் புதிய சாதனை படைக்கக் காத்துள்ளார்.

ஓய்வு பெறுவாரா...

ஓய்வு பெறுவாரா...

தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அவர் ஐபிஎல் போட்டிகள், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்ட் மட்டுமே பாக்கி உள்ளது.

பாகிஸ்தானுடன் மோத வேண்டும் சச்சின்

பாகிஸ்தானுடன் மோத வேண்டும் சச்சின்

இந்த நிலையில்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன், ஈடன் கார்டன் மைதானத்தில் மோத வேண்டும் சச்சின் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் அக்ரம்.

இதுதான் பொருத்தம்

இதுதான் பொருத்தம்

" சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுடன் சந்திக்க வேண்டும். இரு நாட்டு ரசிகர்களும் இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்து ஸ்தம்பித்துப் போக வேண்டும். ஈடன் கார்டன் மைதானத்தில்தான் அதிக அளவிலான ரசிகர்களை அமர வைக்க முடியும். இது நடந்தால் அது வரலாற்று்ச் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்றார் அக்ரம்.

பாகிஸ்தான் வருமா...

பாகிஸ்தான் வருமா...

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா செல்ல இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை. அதற்குப் பதில் பாகிஸ்தானை வரவழைத்து டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில்தான் அக்ரம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று....

Story first published: Friday, September 13, 2013, 10:28 [IST]
Other articles published on Sep 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+