Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கொண்டைக்கடலை விற்கவா இங்கிலாந்து சென்றீர்கள்?" பாபர் அசாமை சாடிய வாசிம் அக்ரம்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை முன்னாள் ஜாம்பவான் வசீம் அக்ரம் கடுமையாகச் சாடியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று பாபர் அசாம் கூறியதற்கு, "அங்கு நீங்கள் என்று வசீம் அக்ரம் காட்டமாகச் சாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர்கள் சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரை நீக்கியதுடன், அணியில் இருந்து ஏழு வீரர்களையும் அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாபர் அசாம், "இது எனக்கும் புதிய செய்திதான், இதுபற்றிய கேள்விகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம்தான் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். பாபரின் இந்த அலட்சியமான பதில் வசீம் அக்ரமை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Babar azam

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற வசீம் அக்ரமிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்தார். "எனக்குத் தெரியாது என்று பாபர் அசாம் கூறுகிறார். உங்களுக்குத் தெரியாது என்றால், அங்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? கொண்டைக்கடலை விற்கவா அங்கு சென்றிருந்தீர்கள்?" என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு

மேலும், "ஒரு மனிதனாக அல்லது ஒரு வீரராக, உங்கள் கேப்டன் உங்களுக்குப் பக்கபலமாக நிற்கவில்லை என்றால், உங்களால் 100 சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.

"நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, எனது கருத்து தவறாகவும் இருக்கலாம். ஆனால், பாபர் இந்த கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது. இதெல்லாம் தேவையற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப்பிறகு, தான் ஒரு வீரராக மட்டுமே விளையாட போவதாக பாபர் அறிவித்திருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என்று அவர் வலியுறுத்தினார்.

IND vs WI: இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Also Read

IND vs WI: இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

பாகிஸ்தானில் பொதுவாக கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க பலரும் தயங்குகிறார்கள். நாட்டின் சக்திவாய்ந்த உள்துறை அமைச்சராக இருக்கும் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருப்பதால், வாரியம் விமர்சனங்களில் இருந்து தப்பித்து விடுகிறது. இதனால், அனைத்துப் பழியும் பாபர் அசாம் மீதே விழுகிறது. ஏற்கனவே சோயப் அக்தர் அவரை ஒரு 'பலவீனமான' ஆளுமை என்று விமர்சித்திருந்த நிலையில், ரஷித் லத்தீப் அவரை ஒரு 'பொம்மை கேப்டன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Sunday, September 20, 2026, 17:37 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+