
என்ன காரணம்
இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என பல்வேறு விவாதங்கள் இணையத்தில் வெடித்து வருகின்றன. இந்தியாவின் மோசமான பவுலிங் மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி ஆகியவை தான் காரணம் என ஒருபுறமும், ஆஸ்திரேலிய களத்தை இந்திய வீரர்கள் புரிந்துக்கொள்ளாததும் தான் காரணம் என மற்றொருபுறமும் வெடித்து வருகிறது.

வசீம் அக்ரம் அறிவுரை
இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து வசீம் அக்ரம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணி நிறைய பலன்களை பெறுகிறது என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. இந்திய அணி முதல்முறையாக 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கியது. எனவே ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தான் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவு தகர்ந்து வருகிறது.

அழிவுக்கு காரணம்
இந்திய வீரர்கள் அயல்நாட்டு தொடர்களில் பங்கேற்று விளையாடினால், உலகக்கோப்பையில் எளிதாக அயல்நாட்டு களங்களை சமாளிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஐபிஎல்-ஐ மட்டுமே நம்பியிருந்தால், அதுவே இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமாக அமையும் என வசீம் அக்ரம் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள்
சர்வதேச அரங்கில் இந்திய அணி ஒவ்வொரு முறையும் சொதப்பும் போதெல்லாம், ரசிகர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல் பக்கம் திரும்புகிறது. அந்தகவகையில் இந்த முறையும் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயமடைந்ததற்கு ஐபிஎல் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தது. 2 மாதங்கள் ஐபிஎல்-ல் ஆடும் அவர்கள், சர்வதேச போட்டிகளில் ஒரு தொடரில் ஆடினாலும் ஓய்வு கேட்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











